For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டு காலம் நீட்டிப்பா? உண்மை என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பாதிப்பை முன்னிட்டு நடப்பு நிதியாண்டு காலத்தில் மத்திய அரசு மாற்றங்கள் செய்திருப்பதாக வெளியான செய்திகளில் உண்மை எதுவும் இல்லை என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் நடப்பு நிதியாண்டு காலமும் மாற்றப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

Coronavirus Lockdown: Fake news on Extend of Financial Year

அதாவது 2020-2021-ம் ஆண்டின் நிதி ஆன்டு தொடக்கமாக ஏப்ரல் 1-ந் தேதிக்கு பதில் ஜூலை 1 ஆக இருக்கும் என தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின. ஆனால் இதனை ஏற்கனவே மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து அறிவித்திருந்தது.

இந்த நிலையில் Indian Stamp Act தொடர்பாக மத்திய அரசு இன்று சில திருத்தங்களுடனான அறிவிக்கையை வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நிதியாண்டு காலத்தை மத்திய அரசு நீட்டித்து விட்டதாக மீண்டும் செய்திகள் பரவ தொடங்கின.

கொரோனாவை முன்வைத்து அவசரநிலை பிரகடனமா? ராணுவம் திட்டவட்ட மறுப்புகொரோனாவை முன்வைத்து அவசரநிலை பிரகடனமா? ராணுவம் திட்டவட்ட மறுப்பு

இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் மத்திய அரசு, நிதியாண்டு காலம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக பொய்யான செய்திகள் சில ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. Indian Stamp Act -ல் திருத்தங்களுக்கான அறிவிக்கைகள்தான் வெளியிடப்பட்டுள்ளன என விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

English summary
Union Ministry of Finance said that There is fake news circulating in some sections of media that the financial year has been extended. A notification issued by the Government of India on 30th March 2020 with respect to some other amendments done in the Indian Stamp Act is being misquoted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X