டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சகோதரரின் மரணம்... ஹரியானாவில் இருந்து பீகாருக்கு சைக்கிளில் பயணிக்கும் கூலி தொழிலாளி

Google Oneindia Tamil News

டெல்லி: தமது சகோதரர் மரணமடைந்ததால் ஹரியானாவில் இருந்து பீகாருக்கு கூலி தொழிலாளி ஒருவர் சைக்கிள் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

கொரோனா லாக்டவுனில் சிக்கித் தவிக்கும் கூலி தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் அனுபவித்து வரும் துயரக் கதைகள் ஏராளம். 1,000 கி.மீ 3, 000 கி.மீ என பயணித்து சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்களும் உண்டு.

Coronavirus Lockdown: Man on Bicycle Wants to Reach Bihar

சொந்த ஊரின் எல்லையை மிதித்த நிலையில் மாண்டவர்களும் உண்டு. தமிழகத்திலும் இப்படியான சோக நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இதனிடையே ஹரியானாவில் இருந்து பீகாருக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டிருக்கும் கூலி தொழிலாளி குறித்தும் செய்திகள் வெளியாகி உள்ளன.

டெல்லி- பரிதாபாத் எல்லையில் உள்ள சோதனை சாவடியில் சைக்கிளில் வந்த கூலி தொழிலாளியை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பீகாரில் தமது சகோதரர் மரணமடந்துவிட்டதால் வேறுவழியே இல்லாமல் சைக்கிளில் செல்கிறேன்.

எப்படியும் 8 முதல் 10 நாட்களில் சென்றுவிடுவேன் என கூறியிருக்கிறார். இது தொடர்பாக பரிதாபாத் காவல்துறை அதிகாரி கூறுகையில், சகோதரரின் மரணம் தொடர்பான ஒரு சான்றிதழை காண்பித்ததால் அவர் ஊருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார் என்றார்.

English summary
ANI reports that a person intending to go to his home in Bihar - on a bicycle, reached Delhi-Faridabad border today. He says, "my brother has passed away and I want to go home now. It will take 8-10 days to reach my home but I want to go there."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X