டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா லாக்டவுன்... கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை கொடுமை!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா லாக்டவுன் காலத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை என்பது 25.09% ஆக அதிகரித்துள்ளது கவலைக்குரியதாக உள்ளது. அதேநேரத்தில் கிராமப்புறங்களை ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளது.

கொரோனா லாக்டவுன் மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்து சி.எம்.ஐ.இ வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாவது:

மே 24-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 24.3% ஆக அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் இது 8.8% ஆக இருந்தது.

கட்டுமானம், ரியல் எஸ்டேட் துறைக்கு பெரிய அடி.. புலம்பெயர் தொழிலாளர் ஊருக்கு போனதால் உருவான சிக்கல் கட்டுமானம், ரியல் எஸ்டேட் துறைக்கு பெரிய அடி.. புலம்பெயர் தொழிலாளர் ஊருக்கு போனதால் உருவான சிக்கல்

நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு

நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு

மே 17-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை 27% ஆக இருந்தது. இது கிராமப்புற வேலைவாய்ப்பின்மையை விட அதிகமானதாகும். அதாவது நகர்ப்புறங்களில் பணி செய்யக் கூடிய வயதினரில் 25%க்கும் குறைவானோர்தான் வேலைவாய்ப்புகளை பெற்றிருக்கின்றனர். அதேநேரத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை என்பது மே 17-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 22.79% ஆக இருந்தது. இது மே 24-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 25.09% ஆக அதிகரித்திருக்கிறது.

தொடரும் ஆட்குறைப்பு

தொடரும் ஆட்குறைப்பு

லாக்டவுன் காலத்தில் நிறுவனங்கள் மேற்கொண்ட ஆட் குறைப்பு, ஊதியம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது. ஸ்விக்கி, உபேர் போன்ற பல நிறுவனங்களைப் போல ரேமண்டும் நூற்றுக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. ஊதிய குறைப்பு நடவடிக்கையையும் மேற்கொண்டிருந்தது. ஓலாவும் ஸ்விக்கியும் 1,000 மற்றும் 1,400 பணியாளர்களை நீக்கியுள்ளது. சுமோட்டா நிறுவனம் 13% பணியாளர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது.

கிராமங்களில் வேலைவாய்ப்பு

கிராமங்களில் வேலைவாய்ப்பு

லாக்டவுன் தளர்வுகளைத் தொடர்ந்து கிராமப்புறங்களில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் கடந்த சில வாரங்களாக கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களில் 25% பேருக்கு வேலைவாய்ப்பின்மை என்பது 4ல் ஒரு கிராமப்புற ஊழியருக்கு வேலை என்பதாகும். நகர்ப்புறங்களில் பணிகளை இழந்தவர்கள், பணிகளை விட்டு விட்டு கிராமங்களுக்கு திரும்பியவர்கள் எண்ணிக்கை கூடுதலாகும் போது நிலைமை மேலும் சிக்கலாகும்.

Recommended Video

    Tamil Nadu Lockdown Extension After May 31?
    சற்று குறைவு

    சற்று குறைவு

    இருப்பினும் பொதுவாக மே 17-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வேலைவாய்ப்பின்மை என்பது 26.95% ஆக இருந்தது. இது தற்போது 22.72% ஆக குறைந்திருக்கிறது. இது தற்போதைய லாக்டவுன் காலத்தில் ஒருவகையில் ஆறுதலை தரக் கூடியதாகும்.

    English summary
    India’s unemployment rate was 24.3% for the week ended May 24 during coronavirus lockdown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X