டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

1000ஐ தொட்ட மகாராஷ்டிரா.. நம்பிக்கை தரும் கேரளா.. இந்தியாவில் 4789 பேருக்கு கொரோனா.. 124 பேர் பலி!

கொரோனா காரணமாக இந்தியாவில் இதுவரை 124 பேர் பலியாகி உள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா காரணமாக இந்தியாவில் இதுவரை 124 பேர் பலியாகி உள்ளனர். இந்தியா முழுக்க 4789 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Recommended Video

    வந்துவிட்டது அதிவேக கொரோனா பரிசோதனை

    இந்தியாவில் கொரோனா விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது, கடந்த 4 நாட்களில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது. இந்தியாவில் அதிகமாக மகாராஷ்டிராவில் மிக மோசமாக 1018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 68 பேர் பலியாகி உள்ளனர்.

    மகாராஷ்டிராவில் 79 பேர் குணமடைந்து உள்ளனர். அதற்கு அடுத்து தமிழகத்தில் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 664 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் 17 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர்.

    கொரோனா.. 2 மணி நேரத்தில் மாறுகிறது.. திடீரென பலியாகிறார்கள்.. தமிழகத்தில் அதிர்ச்சி தந்த 3 மரணங்கள்!கொரோனா.. 2 மணி நேரத்தில் மாறுகிறது.. திடீரென பலியாகிறார்கள்.. தமிழகத்தில் அதிர்ச்சி தந்த 3 மரணங்கள்!

    டெல்லி நிலை

    டெல்லி நிலை

    மூன்றாவது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் 576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 547 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு 20 பேர் குணமடைந்து உள்ளனர். டெல்லியில் 9 பேர் பலியாகி உள்ளனர். தெலுங்கானாவில் 404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 348 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு 45 பேர் குணமடைந்து உள்ளனர். தெலுங்கானாவில் 11 பேர் பலியாகி உள்ளனர். தெலுங்கானா மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

    ராஜஸ்தான் எப்படி உள்ளது

    ராஜஸ்தான் எப்படி உள்ளது

    அதேபோல் ராஜஸ்தானில் 343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 316 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ராஜஸ்தானில் 25 பேர் குணமடைந்து உள்ளனர். அங்கு 2 பேர் பலியாகி உள்ளனர். உத்தர பிரதேசத்தில் மிக குறைவான எண்ணிக்கையில் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உபியில் 308 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு 21 பேர் குணமடைந்து உள்ளனர். உத்தர பிரதேசத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

    ஆந்திர பிரதேசத்தின் நிலை

    ஆந்திர பிரதேசத்தின் நிலை

    ஆந்திர பிரதேசத்தில் 314 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 306 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆந்திர பிரதேசத்தில் 5 பேர் குணமடைந்து உள்ளனர். மொத்தமாக இதுவரை ஆந்திர பிரதேசத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் 175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 136 பேர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 25 பேர் வீடு திரும்பி உள்ளனர். அங்கு இதுவரை 17 பேர் பலியாகி உள்ளனர்.

    கேரளா நல்ல நிலை

    கேரளா நல்ல நிலை

    கேரளா கொரோனாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை பெற்று வருகிறது. அங்கு கொரோனா பரவும் வேகம் குறைந்துள்ளது. கேரளாவில் 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 263 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரளாவில் தற்போது வரை 71 பேர் குணமடைந்து உள்ளனர்.கேரளாவில் இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர். கேரளா மொத்த நாட்டிற்கும் உதாரணமாக மாறியுள்ளது.

    கர்நாடகா எப்படி உள்ளது

    கர்நாடகா எப்படி உள்ளது

    மத்திய பிரதேசத்தில் 290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 248 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மத்திய பிரதேசத்தில் 21 பேர் குணமடைந்து உள்ளனர்.அங்கு 21 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் 175 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 146 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது வரை கர்நாடகாவில் 25 பேர் குணமடைந்து உள்ளனர். அங்கு 4 பேர் பலியாகி உள்ளனர்.

    English summary
    Coronavirus: Maharashtra touches 1000, Kerala shows some hope, 4789 affected in India according to government sources.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X