டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா.. 21 நாள் ஊரடங்கு.. சில துறைகளுக்கு மட்டும் விலக்கு.. புதிய லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு!

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவில் இருந்து விளக்கு அளிக்கப்பட்ட துறைகள் என்ன என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக புதிய லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவில் இருந்து விளக்கு அளிக்கப்பட்ட துறைகள் என்ன என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக புதிய லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.

Recommended Video

    இந்திய மக்களுக்கு இலக்கியா தரும் செய்தி

    இந்தியா முழுக்க நேற்று இரவில் இருந்து மொத்தமாக லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் லாக் டவுன் தற்போது முடிந்துள்ளது. ஏப்ரல் 14ம் தேதி வரை இந்த லாக் டவுன் நீடிக்கும்.

    இந்த லாக் டவுனில் இருந்து சில துறைகளுக்கும், சில பணியாளர்களுக்கும் மட்டும் நேற்று விலக்கு அளிக்கப்ட்டது. மருத்துவத்துறை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது இதில் கூடுதல் துறைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

    எதற்கு எல்லாம் விலக்கு

    எதற்கு எல்லாம் விலக்கு

    தற்போது புதிதாக அறிவிக்கப்பட்டு விலக்குகள்:

    இந்தியாவில் ஊரடங்கு இருந்தாலும், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தாலும் கூட ரிசர்வ் வங்கி ஊழியர் பணிக்கு செல்ல வேண்டும். சிஏஜி அதிகாரிகள் பணிக்கு செல்ல வேண்டும். அதேபோல் எரிபொருள் துறை, பெட்ரோலியம் துறை அதிகாரிகள் பணிக்கு செல்ல வேண்டும். முன்னதாக ராணுவம், போலீஸ், மருத்துவர்கள், மத்திய நிதி அமைச்சகம், பேரிடர் மீட்பு குழு, மின்சார துறைக்கு, சுகாதாரத்துறை பொருந்தாது. மருத்துவமனை, மருத்துவமனை உற்பத்தி சார்ந்து துறைகளுக்கு இந்த தடை கிடையாது என்று கூறப்பட்டு இருந்தது.

    மருத்துவமனை நிலை

    மருத்துவமனை நிலை

    அதேபோல் முன்னதாக மருத்துவமனைகள் இயங்கும், மெடிக்கல்கள் இயங்கும் என்று கூறப்பட்டது. அதோடு சேர்த்து தற்போது கூடுதலாக கால்நடை, விலங்குகள் மருத்துவமனை, பார்மசிக்கள், பாராமெடிக்கல்கள் இயங்கும். அதேபோல் முன்பு வங்கிகள் இயங்கும் என்று கூறப்பட்டது. தற்போது வங்கிகளோடு சேர்த்து வருமான வரித்துறை, நிதி நிர்வாக துறைகள் இயங்கும்.

    மருந்து கடைகள்

    மருந்து கடைகள்

    ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும், அத்யாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். மிக குறைந்த எண்ணிக்கையில் காய்கறி, பால், மீன், கறி, மளிகை கடைகள் இயங்கும் (சுய ஊரடங்கின் போது இயங்கியது போல), இவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக டோர் டெலிவரி செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறினார். தற்போது அதோடு சேர்த்த மருந்து உற்பத்தியகம், அவசர கால பொருட்கள் உற்பத்தி மையங்களும் இயங்கும்.

    சரக்கு உற்பத்தி

    சரக்கு உற்பத்தி

    அதேபோல் ரயில்வே துறை, விமான நிலையத்தில் சரக்கு பணிகள் தொடரும். இதற்கு பணியாளர்கள் பணிக்கு செல்லலாம். நிலக்கரி எடுக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கும். டெல்லி உட்பட நாடு முழுக்க சுங்கத்துறை அதிகாரிகள் பணிகளை மேற்கொள்வார்கள். அதேபோல் ஏர்போர்ட், துறைமுக பணியாளர்களுக்கும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் டோல் கேட் கட்டணம் ஏப்ரல் 14ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது.

    English summary
    Coronavirus: MHA releases new guidelines on 21 days Lock Down.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X