டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெறும் 10 நாளில் இரட்டிப்பு ஆனது.. 50 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு.. இந்தியாவில் கொரோனா தாண்டவம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. 4 மாதங்களில் இந்தியாவில் மொத்தம் 52,345 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    சீனாவை நெருக்கும் உலக நாடுகள்... என்ன காரணம்?

    இந்தியாவில் கடந்த 4 மாதங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஜனவரி மாதம் கேரளாவில் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் குணமடைந்தனர். அதன்பின் டெல்லியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது .

    அதை தொடர்ந்து வேகமாக அதிகரித்த கொரோனா எண்ணிக்கை தற்போது 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 10000 பேருக்கு இந்தியாவில் கொரோனா ஏற்பட்டுள்ளது.

    அதிகம் வரும்

    அதிகம் வரும்

    இந்தியாவில் இனி வரும் நாட்களில் கொரோனா தீவிரம் அடையும். எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இந்தியாவில் மொத்தம் 9 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. உத்தர பிரதேசம், தமிழ்நாடு , மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா, பீகார், பஞ்சாப் , ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

    எத்தனை பலி

    எத்தனை பலி

    கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிகமாக மொத்தம் 3900 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா காரணமாக 1,785 பேர் பலியாகி உள்ளனர். 15,331 பேர் மொத்தமாக நாடு முழுக்க குணமாகி உள்ளனர். கடந்த ஏப்ரல் 26ம் தேதி இந்தியாவில் 26 ஆயிரம் கேஸ்கள் இருந்தது. சரியாக 10 நாட்களில் இந்தியாவில் கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகியுள்ளது.

    எத்தனை பேர் குணம்

    எத்தனை பேர் குணம்

    இந்தியாவில் கொரோனா பாதிக்கப்ட்டவர்கள் குணமடையும் சதவிகிதம் 28.71% ஆக உள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது 16758 பேருக்கு கொரோனா உள்ளது. நேற்று மட்டும் அங்கு 1233 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. மும்பையில் பாதிப்பு 10714 ஆக உள்ளது. குஜராத்தில் 6625 பேருக்கு கொரோனா உள்ளது. அங்கு 396 பேர் பலியாகி உள்ளனர். டெல்லியில் 5532 பேருக்கு கொரோனா உள்ளது. அங்கு 65 பேர் பலியாகி உள்ளனர்.

    தமிழகம் நிலை

    தமிழகம் நிலை

    தமிழகத்தில் நேற்று 771 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. 4285 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உள்ளது. பலி எண்ணிக்கை 35 ஆக உள்ளது. ராஜஸ்தானில் 3317 பேருக்கு கொரோனா உள்ளது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 3138 பேருக்கு கொரோனா உள்ளது. உத்தர பிரதேசத்தில் 2998 பேருக்கு கொரோனா உள்ளது. ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் 1777 பேருக்கு கொரோனா உள்ளது.

    English summary
    Coronavirus: Number of cases in India crosses 50 Thousands in 4 months .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X