டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவசர கொரோனா மீட்டிங்.. நம்பிக்கை அளித்த மோடி.. கேள்வி கேட்ட கெஜ்ரிவால்.. டெல்லியில் என்ன நடக்கிறது?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக டெல்லியில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. கொரோனவை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் மத்திய, மாநில அரசுகள் குழம்பி வருகிறது,

Recommended Video

    Two New Coronavirus Cases Confirmed in india | மேலும் 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

    கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 3118 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுக்க உள்ள பலி எண்ணிக்கை ஆகும் இது. சீனாவில் மட்டும் 3000 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் உலகம் முழுக்க மொத்தம் 90012 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    கடந்த மாதம் கேரளாவில் மூன்று பேருக்கு இந்த வைரஸ் தாக்கியது. கடைசியில் கேரளாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு இருந்த மூன்று பேரும் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு கடைசியாக நடத்தப்பட்ட சோதனை நெகட்டிவ் என்று வந்துள்ளது. இதில் மூன்று பேரும் இறுதியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    டெல்லி எப்படி

    டெல்லி எப்படி

    ஆனால் டெல்லியில் ஒருவருக்கு தற்போது இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக டெல்லியில் அதிக அளவில் பதற்றம் நீடித்து வருகிறது. டெல்லியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. அதிலும் இவருக்கு வைரஸ் ஏற்பட்டதே மிகவும் மோசமான அலட்சியமான விஷயத்தால் கண்டுபிடிக்கப்படாமல் போய் உள்ளது. இத்தாலியில் இருந்து கடந்த வாரம் அந்த நபர் டெல்லி வந்துள்ளார். இத்தாலியில் அதிக அளவில் இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

    இத்தாலி என்ன

    இத்தாலி என்ன

    இத்தாலியில் 1000 பேருக்கும் அதிகமாக இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலிக்கு அருகில் உள்ள நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி உள்ளது. பொதுவாக இத்தாலியில் இருந்து இந்தியா வரும் எல்லோரையும் சோதனை செய்கிறார்கள். ஆனால் இவர் மட்டும் சோதனையில் சிக்கவில்லை. இதற்கு காரணம் உள்ளது. இந்த டெல்லி நபர் நேரடியாக இத்தாலியில் இருந்து டெல்லி வரவில்லை.மாறாக, ஆஸ்திரேலியா சென்றுவிட்டு அங்கிருந்து டெல்லி வந்துள்ளார்.

    விமான நிலையம்

    விமான நிலையம்

    இதனால் இவரை டெல்லி விமான நிலையத்தில் சோதனை செய்யாமல் அப்படியே அனுப்பி இருக்கிறார்கள். இவர் அதன்பின் தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 24ம் தேதி இவர் டெல்லி வந்துள்ளார். 28ம் தேதி இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதன்பின் 1ம் தேதி இவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு, நேற்று இவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    சிகிச்சை செய்கிறார்கள்

    சிகிச்சை செய்கிறார்கள்

    இவரை தற்போது அவருடைய வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். 14 நாட்கள் அவர் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று கூறி சிகிச்சை அளித்து வருகிறார்கள். இவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ஆனால் இடைப்பட்ட நாட்களில் இவர் யாரை எல்லாம் பார்த்தார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களுக்கும் இந்த வைரஸ் பரவி இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அவர்களை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியாமல் டெல்லி அரசு குழம்பி வருகிறது.

    டெல்லி பள்ளி

    டெல்லி பள்ளி

    நொய்டாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்தான் இவரின் குழந்தைகள் படிக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இவர் தனது குழந்தைக்கு பிறந்த நாள் விழா கொண்டாடி உள்ளார். அப்போது அந்த பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பலர், அவர்களின் பெற்றோர் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இதனால் அவர்களுக்கும் நோய் தாக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அந்த குழந்தைகளுக்கு தற்போது தீவிர சோதனை நடந்து வருகிறது.

    கட்டுப்பாடு

    கட்டுப்பாடு

    டெல்லியில் இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக டெல்லியில் பொது இடங்களில் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஷாகீன் பாக் போராட்டம் உட்பட சிஏஏ போராட்டங்கள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் விமான கட்டுப்பாடு விரைவில் விதிக்கப்படலாம். இன்னொரு பக்கம் டெல்லிக்கு வரும் அனைத்து விமான பயணிகளையும் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    என்ன ஆலோசனை

    என்ன ஆலோசனை

    டெல்லியில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் எல்லோரையும் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கியமாக நோய் தாக்கிய நாடுகளை சேர்ந்த மக்கள் யாரவது இருந்தால் அவர்களை கடுமையாக சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் அவசரமாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனை செய்தார். கொரோனா பாதிப்பு எப்படி இருக்கும் .

    யாருக்கு பரவும்

    யாருக்கு பரவும்

    கொரோனா எப்படி பரவும், யாரிடம் இருந்து யாருக்கு பரவும் என்பது தொடர்பாக ஆலோசனைகளை செய்தார். கொரோனா தொடர்பாக நிறைய கேள்விகளை கேட்டறிந்தார். இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனையை செய்தார். அதன்பின் பிரதமர் மோடி தனியாக மத்திய அரசுஅதிகாரிகள் உடன் ஆலோசனை செய்தார். அதில், கொரோனா தொடர்பான பல்வேறு அதிகாரிகள், அமைச்சர்களை சந்தித்து ஆலோசித்தேன்.

    வைரஸ் தாக்குதல்

    வைரஸ் தாக்குதல்

    இவர்கள் எல்லோரும் வைரஸ் தாக்குதலுக்கு எதிராக தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார்கள். விமான நிலையங்கள் எல்லாம் கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.யாரும் பயப்பட வேண்டாம். எல்லோரும் ஒற்றுமையாக செயலாற்ற வேண்டிய நேரம் இது, என்று மோடி குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மக்கள் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்கான அறிவுரைகளையும் வழங்கி இருக்கிறார்.

    English summary
    Coronavirus: One man affected, Urgent meeting, Modi tweet, What is happening in NCR Delhi?.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X