டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாட்டில் 3ல் 2 பங்கு கொரோனா பாதிப்பு 31 மாவட்டங்களில் தான்.. அத்தனைக்கும் உள்ள ஒற்றுமை.. ஷாக் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: திங்கள்கிழமை காலை நிலவரப்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3ல் இரண்டு பங்கு மக்கள் 31 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் அந்த மாவட்டங்களில் தான் வெளியில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் அதிகம் வசிக்கிறார்கள் என்றும் புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

Recommended Video

    கொரோனா பாதிப்பு... தமிழகத்தில் இருக்கும் ஒற்றுமை

    பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்ட ஒரு ஆய்வில், திங்கட்கிழமை வரை 284 மாவட்டங்களில் 4200 பேருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,486 பேருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு அல்லது 34.71 சதவீதம் பாதிப்பு வெறும் 31 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மார்ச் 24 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் 21 நாள் நாடு தழுவிய லாக்டவுன் அறிவிக்கப்பட்ட உடனேயே பல்லாயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வசிப்பது இந்த 31 மாவட்டங்களில் தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    டெல்லி மும்பை சென்னை

    டெல்லி மும்பை சென்னை

    நாட்டின் 3ல் 2 பங்கு கொரோனா நோயாளிகளை கொண்ட 31 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் டெல்லியில் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் கௌதம் புத்தா நகர், ஹரியானாவில் குர்கான், மகாராஷ்டிராவில மும்பை, மும்பை புறநகர், புனே, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கோவை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. மத்திய பிரதேசத்தில் இந்தூர், போபால், கர்நாடகாவில் பெங்களூருவின் 3 மாவட்டங்கள், தெலுங்கானாவில், ஹைதராபாத் மற்றும் ஹைதராபாத் புறநகர், குஜராத்தில் சூரத் மற்றும் பஞ்சாபில் சண்டிகர் ஆகிய மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது.

    மக்கள் அதிகம் வசிக்கிறார்கள்

    மக்கள் அதிகம் வசிக்கிறார்கள்

    மேற்கண்ட நகரங்கள் மற்றும் மாவட்டங்களை பொறுத்தவரை பொருளாதார தேவைகளுக்காக நாட்டின் பிற பகுதிகளில் இருந்து " புலம் பெயர்ந்தவர்கள்" அதிகம் வசிக்கிறார்கள் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் வல்சாத், அசாமில் சோனித்பூர் மற்றும் புதுச்சேரி போன்றவையும் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த மக்கள் உள்ளார்கள். ஆனால் அங்கு பெரியஅளவில் பரவவில்லை.

    மும்பை 2வது இடம்

    மும்பை 2வது இடம்

    திங்கள்கிழமை காலை நிலவரப்படி, நாட்டின் எந்த ஒரு நகரத்திலும் இல்லாத அளவாக டெல்லியில் 523 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அ அதைத் தொடர்ந்து மும்பை, அதன் புறநகர்ப் பகுதிகளில் 315 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏன் அவ்வளவு நம் தமிழகத்தில் சென்னையில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகளாக உள்ள காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளைச் சேர்ந்தால் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.

    மும்பை அடுத்த இடத்தில்

    மும்பை அடுத்த இடத்தில்

    2016- 17 பொருளாதார கணக்கெடுப்பின்படி, உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் தான் அதிகமாக குடியேறுகிறார்கள். இதேபோல் மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் அதிகம் பேர் புலம்பெயர்ந்துள்ளார்கள். அங்கு எல்லாமே கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளது.

    English summary
    One-third of the total COVID-19 cases in the country as of Monday morning are from 31 districts which receive the highest number of migrants.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X