டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா ஆலோசனை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பிய பாகிஸ்தான்.. எழும் கண்டனங்கள்!

கொரோனா வைரஸ் தொடர்பாக இன்று நடந்த சார்க் ஆலோசனையில் காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் எழுப்பியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் தொடர்பாக இன்று நடந்த சார்க் ஆலோசனையில் காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் எழுப்பியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் நாடுகள் பெரும் பதற்றத்தில் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் இந்த வைரஸ் காரணமாக 107 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதிகமாக மகாராஷ்டிராவில் இந்த வைரஸ் காரணமாக 31 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Coronavirus: Pakistan raises Kashmir issue in today SAARC meet

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக இன்று சார்க் நாடுகள் ஒன்றாக சேர்ந்து ஆலோசனை செய்தது. பிரதமர் மோடியின் பெயரில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கொரோனா தொடர்பாக இந்த நாடுகள் ஒன்றாக சேர்ந்த ஆலோசனைகளை மேற்கொண்டது.

இதில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபால், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் கொரோனா குறித்து ஆலோசனை செய்தது. இதில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபால், இலங்கை ஆகிய நாடுகள் கொரோனா குறித்து பேசியது.

கொரோனா குறித்த ஆக்கபூர்வமான விஷயங்களை இந்த நாடுகள் விவாதம் செய்தது. ஆனால் பாகிஸ்தான், இந்த சார்க் மேடையை கூட காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசுவதற்காக பயன்படுத்திக் கொண்டது. பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு துணை அதிகாரி ஷாபர் மிர்ஸா இதில் கலந்து கொண்டு பேசினார், அதில் இந்த வைரசுக்கு எதிராக நாம் துரிதமாக செய்லபட வேண்டும்.

கொரோனா.. மோடி கொடுத்த ஐடியாக்கள்.. வியந்து பாராட்டிய சார்க் தலைவர்கள்.. என்ன விவாதித்தார்கள்? கொரோனா.. மோடி கொடுத்த ஐடியாக்கள்.. வியந்து பாராட்டிய சார்க் தலைவர்கள்.. என்ன விவாதித்தார்கள்?

இந்த வைரஸ் வேகம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் 33 பேர் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது மிகப்பெரிய ஆபத்து என்பதை நாம் உணர வேண்டும். சார்க் அமைப்பு மூலம் திட்டங்கள், ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். அறிவியல் தொடர்பான அறிவிப்புகள், தேசிய பாதுகாப்பு திட்டங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கொரோனாவின் தீவிரத்தை இந்தியா உணர வேண்டும். இதனால் காஷ்மீரில் செய்யப்பட்டு இருக்கும் கட்டுப்பாடுகளை இந்தியா நீக்க வேண்டும். அங்கு கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டு, கொரோனா சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஆனால் கொரோனா தொடர்பான ஒரு ஆலோசனை கூட்டத்தில் காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் பேசியது பெரிய எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. பிரதமர் மோடி இதற்கு எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. பாகிஸ்தானின் இந்த செயலை சார்க் நாடுகள் எதிர்த்துள்ளது.

English summary
Coronavirus: Pakistan raises Kashmir lockdown issue in today's SAARC meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X