டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தொற்று...காத்திருக்கும் பண்டிகைகள்...டல்லாகுமா விற்பனை!!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் முதல் ஜூன் வரை தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு தொழில் மந்தம் ஏற்பட்டது. இன்னும் எவ்வளவு நாட்களுக்கு கொரோனா தொற்று இருக்கும், வர்த்தகம் எப்போது மீளும் என்ற நிச்சயமற்ற தன்மை இருந்து வருகிறது.

இந்த நிலையில் இனி தீபாவளி போன்ற பண்டிகைகளும் வருகின்றன. பண்டிகைகள் வரும்போது நிறுவனங்களும் தள்ளுபடி அளிக்கின்றன. இந்த சமயத்தில், நகை விற்பனை, கார், பைக், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை அதிகமாக இருக்கும். வெளிநாடுகளுக்கு செல்வது, சுற்றுலா செல்வது என்று விமான நிறுவனங்களுக்கும் பெரிய வருமானத்தை எட்டிப் பிடிக்கும்.

இது முடிவு அல்ல.. இனிதான் ஆரம்பம்.. வேதா நிலையத்தை சட்டரீதியில் போராடி மீட்பேன்- ஜெ தீபா சபதம்இது முடிவு அல்ல.. இனிதான் ஆரம்பம்.. வேதா நிலையத்தை சட்டரீதியில் போராடி மீட்பேன்- ஜெ தீபா சபதம்

உணவுப் பொருட்கள்:

உணவுப் பொருட்கள்:

இதுமட்டுமல்ல, தினமும் அழியும் உணவுப் பொருட்களுக்கும் அதிகளவில் கிராக்கி இருக்கும். கடந்த வியாழக்கிழமை வடஇந்தியாவில் தீஜ் என்ற விழா கொண்டாடப்பட்டது. இனி வரும் ஆகஸ்ட் மாதம் ரக்ஷா பந்தன், ஈத் அல் அதா ஆகிய பண்டிகைகள் வரவிருக்கிறது. இதையொட்டி கணேஷ் சதுர்த்தி வரவுள்ளது. இதையடுத்து நாட்டின் முக்கிய பண்டிகைகள் செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் வரும்.

கையில் காசு இல்லை:

கையில் காசு இல்லை:

ஆனால், கடந்த ஆண்டுகளில் இருந்ததுபோன்று நடப்பாண்டில் வர்த்தக நிறுவனங்களில் பெரிய அளவில் விற்பனை இருக்காது என்றே கூறப்படுகிறது. வேலை இல்லாமல் பலரும் தங்களது தொழில்களை மாற்றிக் கொண்டு கூலி வேலைக்கு செல்கின்றனர். சிலர் வேலை இழந்து அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் இன்னும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு பெரிய அளவில் செலவிட மக்கள் முன் வரமாட்டார்கள் என்ற கருத்தே எழுந்துள்ளது.

இரு சக்கர வாகன தயாரிப்பு:

இரு சக்கர வாகன தயாரிப்பு:

பஜாஜ் போன்ற இரு சக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு இருக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து கொரோனா பொது முடக்கத்திலும் உற்பத்தி செய்து வருகிறது. தீபாவளி, தசரா போன்ற பண்டிகைகளின்போது தேவை அதிகரித்தாலும், தேவைக்கு ஏற்ப வாகனங்களின் இருப்பு இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி:

சீனாவில் இருந்து இறக்குமதி:

பொதுவாக இந்தியாவில் இருக்கும் இரு சக்கர வாகனங்ககள் மூலப் பொருட்களுக்கு சீனாவையே நம்பி இருக்கின்றன. இந்தியாவுக்கு சீனாவில் இருந்து 26% மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. சீனாவை தவிர்த்து வேறு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    Oxford vaccine மனித உடலில் இப்படி தான் வேலை செய்யும்
    பயணிகள் இல்லை:

    பயணிகள் இல்லை:

    கொரோனா தொற்று காரணமாக உள்நாட்டிற்குள் 50 சதவீத விமானங்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், விமானங்கள் காலியாக செல்கின்றன. மக்கள் இன்னும் விமானங்களில் பயணிக்க தங்களை தயார்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.

    English summary
    Coronavirus Pandemic: how the festivals like Diwali going to be this year and sales
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X