டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விடிவுகாலம்.. இந்தியாவிலும் எண்டமிக்காக மாறும் கொரோனா வைரஸ்.. எய்ம்ஸ் சொல்லும் நம்பிக்கை செய்தி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் எண்டமிக் என்ற நிலையை எட்டும் சூழ்நிலை நிலவுவதாக எய்ம்ஸ் டெல்லியை சேர்ந்த மூத்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஒரு வைரஸ் மக்கள் இடையே பரவி அதன்பின் ஒரு இனக்குழு இடையே நீக்கமற நிறைந்தால் அதை எண்டமிக் என்று அழைப்பார்கள். அதாவது ஒரு நோய் மக்களை தாக்கிவிட்டு.. அதன்பின் சில நாட்கள் காணாமல் போய்விட்டு.. பின்னர் மீண்டும் தோன்றி பரவினால் அது எண்டமிக். இது போன்ற எண்டமிக் நோய்கள் பெரிய அளவில் மரணத்தை ஏற்படுத்தாது.

பெரிய அளவில் அலைகளை ஏற்படுத்தாது. அவ்வப்போது வந்து தாக்கிவிட்டு பின்னர் ரெஸ்ட் எடுக்க சென்றுவிடும். டெங்கு, காலரா, ஃப்ளு காய்ச்சல், மலேரியா எல்லாமே எண்டமிக் வகை கேஸ்கள்தான்.

போலி இந்துத்துவா பேசுது பாஜக.. கூட்டணி வெச்சு 25 வருஷம் வீண்- ஓவரா வருத்தப்படும் உத்தவ் தாக்கரே போலி இந்துத்துவா பேசுது பாஜக.. கூட்டணி வெச்சு 25 வருஷம் வீண்- ஓவரா வருத்தப்படும் உத்தவ் தாக்கரே

இந்தியா கொரோனா

இந்தியா கொரோனா

ஒரு நோயின் ஆற்றல் குறைந்து, மக்கள் இதற்கான எதிர்ப்பு சக்தியை பெறும் போது பெரும்பாலான சமயங்களில் ஒரு நோய் எண்டமிக் என்ற நிலையை அடையும். தற்போது உலகம் முழுக்க கொரோனா வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இதனால் பலருக்கு இதற்கு எதிரான எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது. இது போக கொரோனா வேக்சின் காரணமாகவும் மக்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.

இந்தியா ஓமிக்ரான்

இந்தியா ஓமிக்ரான்

எனவே உலகம் முழுக்க கொரோனா எண்டமிக் என்ற நிலையை அடையும் சூழ்நிலை நிலவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் எண்டமிக் என்ற நிலையை எட்டும் சூழ்நிலை நிலவுவதாக எய்ம்ஸ் டெல்லியை சேர்ந்த மூத்த மருத்துவர் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை மூத்த வைராலஜி மருத்துவர் டாக்டர் சஞ்சய் ராய் அளித்த பேட்டியில், இந்தியாவில் கொரோனா எண்டமிக் என்ற நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

எண்டமிக்

எண்டமிக்

இந்தியாவில் மக்களுக்கு வேக்சின் வேகமாக போடப்பட்டு வருகிறது. அதேபோல் இயற்கையாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து உள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பு அடையாதவர்களும் வரும் நாட்களில் பாதிப்பு அடையும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட போகிறார்கள். ஓமிக்ரான் அவ்வளவு வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மக்களுக்கு எதிர்ப்பு சக்தி ஏற்படும்.

எய்ம்ஸ் மருத்துவர்

எய்ம்ஸ் மருத்துவர்

பின்னர் இதன் மூலம் கொரோனா இந்தியாவில் எண்டமிக் என்ற நிலையை அடையும். ஓமிக்ரான் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுக்கவே வேகமாக பரவிக்கொண்டு இருக்கின்றது. மற்ற வகை கொரோனாவை விட ஓமிக்ரான் கொரோனா வேகமாக பரவினாலும் இதன் தீவிரத்தன்மை குறைவாக உள்ளது. ஏற்கனவே கொரோனாவில் இருந்து விடுப்பட்டவர்கள்தான் கொரோனாவிற்கு எதிராக அதிக எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்று எங்களின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

எண்டமிக் பரவல்

எண்டமிக் பரவல்

அடுத்தபடியாக கொரோனா வேக்சின் போட்டுக்கொண்டவர்களிடம் நல்ல எதிர்ப்பு சக்தி காணப்படுகிறது. இந்தியாவில் மெட்ரோ நகரங்களில்தான் ஓமிக்ரான் வேகமாக பரவுகிறது. சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரில்தான் ஓமிக்ரான் அதிகம் பரவுகிறது. காரணம் இங்கு இருக்கும் மக்கள் தொகை. இங்கு மக்கள் தொகை அதிகம் உள்ளதால் கேஸ்கள் வேகமாக உயர்கிறது. அதே சமயம் பல நாடுகளில் ஓமிக்ரான் அலைகள் சட்டென சரிந்துள்ளது.

மூன்றாம் அலை

மூன்றாம் அலை

வேகமாக உயர்ந்து சட்டென கேஸ்கள் குறைகின்றன. இந்தியாவிலும் அது நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாம் அலை விரைவில் முடிவிற்கு வரும். அப்போது கொரோனா எண்டமிக் என்ற நிலையை அடையலாம் என்று எய்ம்ஸ் மருத்துவமனை மூத்த வைராலஜி மருத்துவர் டாக்டர் சஞ்சய் ராய் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா எண்டமிக் என்ற நிலையை அடைந்தால் பரவல் நின்று மக்கள் மீண்டும் வெளியே வரும் சூழ்நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Coronavirus pandemic may become endemic in India too soon says AIIMS chief scientist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X