டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. உலக மக்கள் நம்மை கவனிக்கிறார்கள்.. ஜி20 ஆலோசனையில் மோடி அதிரடி.. குவியும் பாராட்டு!

நம்முடைய செயலை உலகம் கவனித்துக் கொண்டு இருக்கிறது, கொரோனாவிற்கு எதிராக நாம் துரிதமாக செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கொரோனா குறித்த ஜி 20 ஆலோசனை கூட்டத்தில் இன்று பேசியுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: நம்முடைய செயலை உலகம் கவனித்துக் கொண்டு இருக்கிறது, கொரோனாவிற்கு எதிராக நாம் துரிதமாக செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கொரோனா குறித்த ஜி 20 ஆலோசனை கூட்டத்தில் இன்று பேசியுள்ளார்.

Recommended Video

    கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்? அதிர்ச்சி ரிப்போர்ட்

    கொரோனா பாதிப்பு குறித்து ஜி20 நாடுகள் சேர்ந்து இன்று ஆலோசனை நடத்தியது. வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இந்த ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்தியா சார்பாக பிரதமர் மோடி இந்த ஆலோசனையில் கலந்து கொண்டு பேசினார். அதேபோல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.

    மோடி பேச்சு என்ன

    மோடி பேச்சு என்ன

    பிரதமர் மோடி இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா வைரஸ் உருவாகி 3 மாதங்கள் ஆகிவிட்டது. நாம் இப்போதும் கூட இதை எதிர்ப்பதற்கு என்ன வழி என்று தேடிக்கொண்டு இருக்கிறோம். இந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்று இப்போதுதான் யோசிக்கிறோம். நம்முடைய செயலை உலகம் கவனித்துக் கொண்டு இருக்கிறது. உலக நாடுகள் சேர்ந்து இந்த கொரோனவை எதிர்கொள்ள வேண்டும். நாம் ஒன்று சேர்ந்தால்தான் இதை எதிர்கொள்ள முடியும்.

    ஜி 20 நாடுகள் லிஸ்ட்

    ஜி 20 நாடுகள் லிஸ்ட்

    உலகில் கொரோனா ஏற்பட்ட நாடுகளில் ஜி20 நாடுகள்தான் அதிகம். 90% கொரோனா பாதிப்பு ஜி20 நாடுகளில்தான் ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல் 80% கொரோனா பலி ஜி20 நாடுகளில் இருந்துதான் ஏற்பட்டுள்ளது. நாம் உலகின் ஜிடிபியில் 80%த்தை உள்ளடக்கி உள்ளோம். அதேபோல் உலகின் மக்கள் தொகையில் 60% நம்மிடமே உள்ளது. ஆனாலும் இதுதான் நிலை, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    மோடி பாராட்டு

    மோடி பாராட்டு

    உலக சுகாதார மைய தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவின் செயலை ஜி20 நாடுகள் பாராட்டியதாக கூறப்படுகிறது. கொரோனாவிற்கு எதிராக இந்தியா சிறப்பாக செயல்படுகிறது. மொத்த நாட்டையும் இந்தியா லாக் டவுன் செய்தது நல்ல முடிவு. உலக அளவில் இது கவனம் பெறும் என்று கூறப்பட்டதாக தகவல்கள் வருகிறது.

    யாரும் காரணம் இல்லை

    யாரும் காரணம் இல்லை

    இந்த ஆலோசனையில் எந்த ஒரு நாட்டையும் கொரோனா பாதிப்பிற்காக யாரும் குற்றஞ்சாட்டவில்லை. அதேபோல் கொரோனா இதற்குள் சரியாக வாய்ப்புள்ளது என்றும் யாரும் கூறவில்லை. இதை எதிர்கொள்வது எப்படி என்று மட்டும் ஆலோசிக்கப்பட்டது. மருத்துவ துறையில் எப்படி முன்னேறுவது, புதிய மருந்துகளை கண்டுபிடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    English summary
    Coronavirus: People are watching us, We have to take action says PM Modi G20 meet today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X