டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. வேலை இழந்த மக்கள்.. உ.பி நோக்கி சாரை சாரையாக சென்ற மக்கள்.. டெல்லியில் சோகம்!

கொரோனா வைரஸ் பாதிப்பால் டெல்லி முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கூட்டம் கூட்டமாக டெல்லியில் இருந்து உத்தர பிரதேசம் நோக்கி நேற்று படையெடுத்து சென்றனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பால் டெல்லி முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கூட்டம் கூட்டமாக டெல்லியில் இருந்து உத்தர பிரதேசம் நோக்கி நேற்று படையெடுத்து சென்றனர்.

Recommended Video

    வேலை இழந்த மக்கள்.. உ.பி நோக்கி சாரை சாரையாக சென்ற மக்கள்.. டெல்லியில் சோகம்! - வீடியோ

    கொரோனா பரவல் காரணமாக இந்தியா மொத்தமும் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு இந்தியா முழுக்க லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுக்க கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க பல லட்சம் மக்கள் தங்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    முக்கியமாக டெல்லியில் குடியேறி இருக்கும் பிற மாநில மக்கள் தங்கள் வேலையை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளனர். இதனால் தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு டெல்லியில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள தங்கள் சொந்த ஊர் நோக்கி நேற்று மக்கள் படையெடுத்து சென்றனர். ஊரடங்கு காரணமாக டெல்லியில் இவர்களின் பணிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    Coronavirus: People left to Uttarpradesh to Delhi after curfew

    உத்தர பிரதேசத்தை சேர்ந்த இவர்கள் டெல்லியில் மூட்டை தூக்குவது, ரிக்சா ஓட்டுவது, கட்டுமான பணிகளை செய்வது,வீட்டு வேலைகளை பார்ப்பது, மெட்ரோ பணிகளை மேற்கொள்வது என்று பல பணிகளை மேற்கொள்கிறார்கள்.

    இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக மொத்தமாக இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் தினசரி கூலியை நம்பித்தான் இருக்கிறார்கள். இந்த ஊரடங்கு காரணமாக, இவர்களுக்கு தினசரி வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் உத்தர பிரதேசத்தில் இருக்கும் தங்கள் சொந்த ஊர்களுக்கு இவர்கள் இன்று சென்றனர்.

    ஊரடங்கு காரணமாக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் இவர்கள் ரயில், பேருந்து என்று எது வழியாகவும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை. இதனால் நடைபயணமாக டெல்லி நோக்கி சென்றார்கள். ஆம் டெல்லியில் இருந்து உத்தர பிரதேசம் நோக்கி நடைபயணமாக சென்றார்கள். தங்கள் குழந்தைகளை கையில் சுமந்து கொண்டு பெண்கள் பலர் இதில் கூட்டமாக சென்றனர்.

    மக்கள் வெளியே வந்தால் ஆபத்து என்ற போதிலும், தங்கள் எதிர்காலத்திற்காக இவர்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர். இன்று மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் இப்படி கூட்டம் கூட்டமாக டெல்லியில் இருந்து உத்தர பிரதேசம் நோக்கி சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று இப்படி கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்களை டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சந்தித்து பேசினார்.

    நீங்கள் யாரும் உங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டாம். உங்களுக்கு தற்காலிக இடம் ஏற்பாடு செய்து தருகிறோம். நீங்கள் யாரும் வீட்டிற்கு செல்ல வேண்டாம். நீங்கள் இங்கேயே இருங்கள் என்று கோரிக்கை வைத்தார். ஆனாலும் உத்தர பிரதேசம் நோக்கி டெல்லியில் இருந்து தொடர்ந்து மக்கள் வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது. இன்றும் இப்படி பலர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Coronavirus: People left to Uttarpradesh to Delhi after curfew
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X