டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா அப்டேட் என்ன? நாளை மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.. முக்கிய முடிவு!

பிரதமர் மோடி நாளை நாடு முழுக்க அனைத்து மாநில முதல்வர்களுடன் சேர்ந்து முக்கியமான ஆலோசனைகளை நடத்த உள்ளார் .

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி நாளை நாடு முழுக்க அனைத்து மாநில முதல்வர்களுடன் சேர்ந்து கொரோனா குறித்து முக்கியமான ஆலோசனை நடத்த உள்ளார் .

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை மொத்தம் 1750 பேருக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. இதில் 1542 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் இதுவரை 155 பேர் குணமடைந்து உள்ளனர்.

Coronavirus: PM Modi to meet State Chief Minister to discuss on the out break

55 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் அதிகமாக மகாராஷ்டிராவில் 325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 124 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். டெல்லியில் 123 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மொத்தம் நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 24ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு பிறகு தொடங்கியது.

ஏப்ரல் 14ம் தேதி வரை இந்த ஊரடங்கு நடக்க உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை நாடு முழுக்க அனைத்து மாநில முதல்வர்களுடன் சேர்ந்து முக்கியமான ஆலோசனைகளை நடத்த உள்ளார் . கொரோனா குறித்து முக்கியமான ஆலோசனைகளை இவர் நடத்த உள்ளார். வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.

கொரோனா குறித்த மாநில அரசுகளின் நடவடிக்கை என்ன, ரிப்போர்ட் என்ன என்று பிரதமர் மோடி இதில் கேட்பார் என்கிறார்கள்.

Recommended Video

    கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற களம் இறங்கிய முகேஷ் அம்பானி!

    கடந்த முறை இதேபோல் மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனைக்கு பின்தான் நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அதேபோல் மீண்டும் ஆலோசனை நடக்க உள்ளதால் கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Coronavirus: PM Modi to meet State Chief Minister to discuss on the out break tomorrow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X