டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகம் முழுவதும் தீயாய் பரவும் கொரோனா.. இதுவரை 339,013,165 பேர் பாதிப்பு.. 5,582,614 பேர் பலி

கொரோனாவைரஸ் பாதிப்பில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவைரஸ் தொற்று பாதிப்பினால் 339,013,165 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 272,628,997 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாறி, அடுத்தடுத்த பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கொரோனாவால் மனித வாழ்க்கையே முடங்கி போயுள்ளது... அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா தொற்றானது இன்றைக்கு உலகத்தையே ஆட்டி படைத்து வருகிறது.. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த தொற்றானது பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தியும் வருகிறது... இதுபோதாமல், மற்றொரு ஒமிக்ரான் வைரஸ் திடீரென கிளம்பி வந்து மிரட்டி கொண்டிருக்கிறது.

 தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு.. ஆறுதல் அளிக்கும் சென்னை .. பயமுறுத்தும் கோவை, சேலம் தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு.. ஆறுதல் அளிக்கும் சென்னை .. பயமுறுத்தும் கோவை, சேலம்

பூரண நலம்

பூரண நலம்

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55.82 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,582,614 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்... அதேபோல, உலகம் முழுவதும் கொரோனாவால் 339,013,165 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 272,628,997 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 58,676,013 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரேசில்

பிரேசில்

கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்திலும், பிரேசில் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 37 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள்படி, கொரோனா நோய்த்தொற்றில் அமெரிக்காவுக்கு அடுத்தபடி உலகளவில் 2வது அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது.

டிஸ்சார்ஜ்

டிஸ்சார்ஜ்

அமெரிக்காவில் ஒரு நாளில் 463,633 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.. ஒரேநாளில் 1,948 பேர் பலியாகி உள்ளனர்.. இதுவரை அங்கு 43,700,835 பேர் குணமாகி உள்ளனர்.. அமெரிக்காவில் இதுவரை 69,639,259 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 38,216,399 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.. நேற்று ஒரே நாளில் 315,158 கோரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன... 487,719 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.. இதுவரை மட்டும் 35,796,422 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

பாதிப்பு

பாதிப்பு

இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேஸில் உள்ளது.. 23,420,861 பேர் இதுவரை அங்கு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.. நேற்று ஒரே நாளில் 205,310 பேருக்கு தொற்று உறுதியாக உள்ளது.. 493 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்.. பிரேஸிலில் தொற்று எண்ணிக்கை 23,420,861 ஆக உயர்ந்துள்ளது.. அங்கு 621,927 பேர் இதுவரை அங்கு உயிரிழந்துள்ளனர்.. நேற்று மட்டும் 317 பேர் இறந்துள்ளனர்.

Recommended Video

    Omicrons 20 Symptoms Revealed! How Long They Last | OneIndia Tamil
    சிகிச்சை

    சிகிச்சை

    ரஷ்ய நாட்டை பொறுத்தவரை இதுவரை 10,899,411 பேர் இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,899 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது.. கொரோனா தொற்றுக்கு நேற்று ஒரேநாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.. அங்கு கொரோனா தொற்றில் இருந்து 98 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    English summary
    Coronavirus positive case crosses 339,013,165 and death case 5,582,614உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55.82 லட்சத்தை தாண்டியது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X