டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கைகொடுத்த ஆயுர்வேத சிகிச்சை? இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்.. கொரோனாவிலிருந்து மீண்டது எப்படி?

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ஆயுர்வேத மருத்துவ முறை மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்ததாக மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ஆயுர்வேத மருத்துவ முறை மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்ததாக மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கொரோனா வைரஸ் சோதனை கூட்டத்தில் உருவாக்கப்பட்டதா?

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லசுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கடந்த மார்ச் இறுதியில் உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து அவர் தனிமைபடுத்தப்பட்டு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு கவனித்துக் கொள்ளப்பட்டார்.

    இந்த நிலையில் தொடர் சிகிச்சை காரணமாக இவர் குணமடைந்து, இரண்டு நாட்களுக்கு முன் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தார். நான் முற்றிலும் குணமடைந்தாலும் தொடர்ந்து சமூக விலகலைக் கடைப்பிடிக்கப் போகிறேன் என்று இளவரசர் சார்லஸ் தான் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டு இருந்தார்.

    கொரோனா பணிக்கு வராத 54 ஜிஎச் ஊழியர்கள்.. பணி நீக்கம் செய்த கலெக்டர்! கொரோனா பணிக்கு வராத 54 ஜிஎச் ஊழியர்கள்.. பணி நீக்கம் செய்த கலெக்டர்!

     சார்லஸ் எப்படி குணமடைந்தார்

    சார்லஸ் எப்படி குணமடைந்தார்

    இந்த நிலையில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் குணமடைந்தது குறித்து மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இளவரசர் சார்லஸ் ஆயுர் வேத சிகிச்சை மூலம் குணமடைந்ததாக எனக்கு தகவல் வந்துள்ளது. பெங்களூரை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஐசக் மத்தாய் எனக்கு போன் செய்து இந்த தகவலை தெரிவித்தார். இவர் பெங்களூரில் சவுக்கியா ஆயுர்வேத ரிசார்ட் ஒன்றை நடத்தி வருகிறார்.

    ஆயுர்வேத மருத்துவ முறை

    ஆயுர்வேத மருத்துவ முறை

    அவருடைய மருத்துவ முறைதான், சார்லசை குணப்படுத்தியது என்று அவர் என்னிடம் தெரிவித்துள்ளார். ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி இரண்டும் சேர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவர் குணமடைந்தார் என்று மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விளக்கம் கொடுத்தார்

    விளக்கம் கொடுத்தார்

    இந்த நிலையில் ஆயுர்வேத மருத்துவர் ஐசக் மத்தாய் இதுகுறித்து இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பிரிட்டீஷ் இளவரசர் சார்லஸ் மற்றும் அவரின் மனைவி இருவரும் என்னுடைய வாடிக்கையான விசிட்டர்கள்தான். ஆனால் அவருக்கு என்ன சிகிச்சை கொடுத்தேன் என்று என்னால் கூற முடியாது. மருத்துவ விதிமுறைகளின்படி அதை என்னால் கூற முடியாது.

    ரிசார்ட்டில் சில மாதங்கள் முன் தங்கி இருந்தார்

    ரிசார்ட்டில் சில மாதங்கள் முன் தங்கி இருந்தார்

    அவர் என்னுடைய மருத்துவ ரிசார்ட்டில் சில மாதங்கள் முன் தங்கி இருந்தார். கடந்த மாதம் அவரை நான் லண்டனில் சந்தித்து இருந்தேன். ஆனால் அவருக்கு கொடுத்த மருந்து குறித்து என்னால் விளக்க முடியாது. நான் அதே மருந்தை ஃப்ளூ காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்ட பலருக்கு கொடுத்து இருக்கிறேன். ஆனால் கொரோனா பாதித்த நோயாளிகள் யாருக்கும் இந்த மருந்தை நான் கொடுத்தது இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

    நிறைய குழப்பங்கள் நிலவுகிறது

    நிறைய குழப்பங்கள் நிலவுகிறது

    அதே சமயம் லண்டனில் இருந்து இளவரசரின் அலுவலக அதிகாரிகள் இதை மறுத்து இருக்கிறார்கள். அதில் இந்த செய்தி பொய்யானது. லண்டனின் அதிகாரபூர்வ தேசிய சுகாதார சேவை எனப்படும் National Health Serviceதான் இளவரசருக்கு சிகிச்சை அளித்தது. வேறு சிகிச்சை எதுவும் அவருக்கு அளிக்கப்படவில்லை, என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனால் சார்லசுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து நிறைய சந்தேகங்கள் எழுந்துள்ளது.

    English summary
    Coronavirus: Prince Charles cured by ayurveda treatment? What is the truth behind it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X