For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா: லாக்டவுனை பஞ்சாப் அரசு நீட்டித்ததாக வெளியான செய்தி உண்மையா?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவை தடுப்பதற்கான லாக்டவுனை பஞ்சாப் மாநில அரசு நீட்டித்துள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் 3-வது வாரமாக அமலில் உள்ள கொரோனா லாக்டவுன் ஏப்ரல் 14-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த லாக்டவுன் நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

Coronavirus: Punjab has not extended lockdown till April 30

நாடாளுமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று ஆலோசனை நடத்திய பிரதமர் மோடியும், லாக்டவுனை நீட்டிக்க வாய்ப்பிருக்கிறது என கூறியிருந்தார். இதேபோல் பல மாநில அரசுகளும் லாக்டவுனை நீட்டிக்கலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளன.

இந்நிலையில் ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், லாக்டவுனை வரும் 30-ந் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநில அரசை பின்பற்றியே ஒடிஷா அரசு இம்முடிவை மேற்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

Recommended Video

    Fake News Buster | அனைத்து ஹோட்டல்களையும் அக்டோபர் 15-வரை மூட உத்தரவு செய்தி உண்மையா?

    ஆனால் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங்கின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரால், ஊடகங்களில் பஞ்சாப் மாநில அரசு லாக்டவுனை நீட்டித்திருப்பதாக வெளியான செய்திகளை மறுத்திருந்தார். அந்த செய்திகளில் உண்மைகள் எதுவும் இல்லை எனவும் கூறியிருந்தார். இதை தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    Punjab Chief Minister Amarinder Singh's Raveen Thukral has denied reports that the lockdown would be extended up to April 30.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X