டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிதீவிரமான கொரோனா 2ஆம் அலை.. ஒரு மணி நேரத்திற்கு புதிதாக 10 ஆயிரம் பேருக்கு பாதிப்பு, 60 பேர் பலி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சராசரியாக ஒரு மணி நேரத்திற்குப் புதிதாக 10,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்படுகிறது. சராசரி கொரோனா உயிரிழப்பும் 60ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

திங்கள்கிழமை மட்டும் இந்தியாவில் புதிதாக 2.73 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதேபோல சிகிச்சை பலனிற்றி 1,619 பேர் பலியாகினர். மேலும், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 19 லட்சத்தைக் கடந்தது.

முழு ஊரடங்குக்கு இப்போது அவசியமில்லை.. அது கடைசிக் கட்டம்தான்.. மோடி அறிவிப்புமுழு ஊரடங்குக்கு இப்போது அவசியமில்லை.. அது கடைசிக் கட்டம்தான்.. மோடி அறிவிப்பு

ஏப்ரல் தொடக்கத்தில்

ஏப்ரல் தொடக்கத்தில்

இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு சரராசியாகப் பதிவு செய்யப்படும் கொரோனா பாதிப்பும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நாட்டில் 72,330 பேருக்குப் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும், அன்றைய தினம் 459 பேர் பலியாகினர். அன்று ஒரு மணி நேரத்திற்குச் சராசரியாக 3,013 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கான கொரோனா உயிரிழப்பும் அப்போது 19ஆக மட்டுமே இருந்தது.

சராசரி பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது

சராசரி பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டின் ஒரு மணி நேரத்திற்கு உறுதி செய்யப்படும் கொரோனா எண்ணிக்கை 10,895ஆக உயர்ந்தது. ஒரு மணி நேரத்திற்கான கொரோ உயிரிழப்புகளும் 62ஆக பதிவானது. அன்றைய தினம் இந்தியாவில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டிருந்தது. மேலும், பதிவு செய்யப்பட்டிருந்த கொரோனா உயிரிழப்புகளும் 1,501ஆக இருந்தது,

புதிய உச்சம்

புதிய உச்சம்

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகக் கடந்த திங்கள் 2,73,810 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதாவது சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 11,408 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதேபோல சாரசரி கொரோனா உயிரிழப்பும் 67ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை நேற்று சற்று குறைந்துள்ளது, சராசரியாக 10,798 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் சராசரி கொரோனா உயிரிழப்பு 73ஆக இருந்தது.

மகாராஷ்டிரா ரொம்ப மோசம்

மகாராஷ்டிரா ரொம்ப மோசம்

கடந்த ஏப்ரல் 1 முதல் மகாராஷ்டிராவில் வைரஸ் பாதிப்பு மோசமாக உள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி ஒரு மணி நேரத்திற்கு 39,544 பேருக்கு அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; உயிரிழப்புகளும் 9ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 68,631 புதிய கொரோனா பாதிப்பு மற்றும் 503 உயிரிழப்புகள் என உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி உட்பட 10 மாநிலங்களில் மட்டுமே 82.74% கொரோனா உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

மாநில வாரியாக பாதிப்பு

மாநில வாரியாக பாதிப்பு

அதேபோல கொரோனா பாதிப்பைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தமிழகம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 77.67% புதிய பாதிப்புகள் கண்டறியப்படுகிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு மோசமாக உள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 41ஆவது நாளாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 20.31 லட்சமாக உள்ளது. இது ஒட்டுமொத்தமாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 13.26% ஆகும். மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டும் நாட்டின் 62.07% ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு ஜூலை 17ஆம் தேதி 10 லட்சத்தை அடைந்தது. ஆகஸ்ட் 7ஆம் தேதி 20 லட்சத்தை அடைந்த கொரோனா பாதிப்பு, செப்டம்பர் 16ஆம் தேதி 50 லட்சத்தைக் கடந்தது. மேலும், கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி 60 லட்சமாகவும், அக்டோபர் 29ஆம் தேதி 80 லட்சமாகவும் நாட்டின் கொரோனா பாதிப்பு இருந்தது. பின்னர் டிசம்பர் 19ஆம் தேதி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியைக் கடந்தது.

English summary
Coronavirus Second Wave in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X