டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாரசிட்டமால் மருந்து விலை 40 சதவீதம் அதிகரிப்பு.. சீனாவால் இந்தியாவுக்கு பெரும் சிக்கல்!

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவில் கொரோனா வைரஸ் பிரச்சனையால் அங்குள்ள மருந்து கம்பெனிகள் உற்பத்தியை நிறுத்தியதால் இந்தியாவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய மருந்து பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பாரசிட்டமால் மருந்துகள் விலை 40 அளவுக்கு உயர்ந்துள்ளது.

1700 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற கொரோனா வைரஸ், சீனாவில் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலைக்கான அச்சத்தை விதைத்துள்ளது. அங்குள்ள தொழிற்சாலைகள் உற்பத்தியைக் குறைத்துள்ளன.

சீன அரசு வைரஸ் பரவுவதை தடுக்க நாட்டு மக்களை நாட்டிற்க உள்ளேயும் வெளியேயும் செல்ல தடை விதித்துள்ளது. இது உலகளாவிய மருந்து விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விநியோக சந்தைகளை முற்றிலும் சீர்குலைத்துள்ளது.

மூலப்பொருட்கள்

மூலப்பொருட்கள்

சீனாவை தளமாகக் கொண்ட மருந்து உற்பத்தியாளர்கள் தொழிற்சாலைகளை மீண்டும் இயக்கமால் உள்ளதால், மருந்து மூலப்பொருட்களுக்கு பெரிதும் சீனாவை நம்பியுள்ள இந்தியா போன்ற நாடுகள், மருந்தின் மூலப்பொருட்கள் கிடைக்காமல், எப்போது கிடைக்கும் என்று தெரியாத நிச்சயமற்ற தன்மையால் அதிர்ச்சியில் உள்ளன.

இந்தியா தான் டாப்

இந்தியா தான் டாப்

இதனால் இப்போது மருந்து பொருட்களின் இருப்பு போதாத நிலை காரணமாக மருந்து பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மருந்துகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் குறுகிய அளவிலயே இந்தியாவில் உள்ளது. உலகிற்கு மிகப் பெரிய பொதுவான மருந்துகளை வழங்குபவர்களில் ஒருவரான இந்தியா, அமெரிக்க மருந்து சந்தையில் 12 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. ஆனால் இந்தியா 80% பயன்பாட்டில் உள்ள மருந்து மூலப்பொருள்களின் தேவைக்காக சீனாவை நம்பியுள்ளது. இப்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய முடியாததால் மருந்து உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவை தாண்டி உலகத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசித்ரோமைசினின்

அசித்ரோமைசினின்

இதன் காரணமாக பொதுவாகப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மருந்தான பாராசிட்டமால் விலைகள் இந்தியாவில் 40% உயர்ந்துள்ளன, அதே நேரத்தில் பலவகையான பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஆண்டிபயாடிக் அசித்ரோமைசினின் விலை 70% உயர்ந்துள்ளது என்று ஜைடஸ் காடிலாவின் தலைவர் பங்கஜ் ஆர் படேல் தெரிவித்தார். .

இன்னும் இரு வாரம்

இன்னும் இரு வாரம்

அடுத்த மாதத்தின் முதல் வாரத்திற்குள் பொருட்கள் மீட்டெடுக்கப்படாவிட்டால், ஏப்ரல் முதல் மருந்தகத் தொழில் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் என்று அவர் கூறினார். இதற்கிடையில் இந்திய அரசு பற்றாக்குறை அதிகமாக உள்ள 12 அத்தியாவசிய மருந்துகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

English summary
coronavirus shuts China: Paracetamol prices up 40%. while the cost of azithromycin, an antibiotic used for treating a variety of bacterial infections, has risen by 70% in india
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X