டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கஷ்டப்பட்டு ஓடி வந்தேனே.. உன் முகத்தைக் கூட பார்க்க முடியலையே.. தாயை இழந்து கதறிய மகன்!

தாயின் இறுதி சடங்கிலும் கலந்து கொள்ள முடியாத நிலைமை மகனுக்கு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: "கடைசி வரை உன் முகத்த கூட பார்க்க முடியலயேம்மா.. உனக்காகத்தானே எல்லாத்தையும் விட்டுட்டு வந்தேன்" என்று இளைஞர் ஒருவர் தாயின் சடலத்தைகூட பார்க்க முடியாத கொடுமை நடந்துள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்தவர் அமீர்கான்.. 30 வயதாகிறது.. துபாயில் வேலை கிடைத்துவிடவும், 6 வருடமாக அங்குதான் இருக்கிறார்.

கொஞ்ச நாளாக அமீரின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது.. அதனால் அம்மாவை பார்கக் துபாயிலிருந்து இந்தியா கிளம்ப முடிவெடுத்திருந்தார்.

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது இருக்கட்டும்.. சீனாவில் பள்ளிக்குள் குழந்தைகள் போவதை,, பாருங்கதமிழகத்தில் பள்ளிகளை திறப்பது இருக்கட்டும்.. சீனாவில் பள்ளிக்குள் குழந்தைகள் போவதை,, பாருங்க

 ஆஸ்பத்திரி

ஆஸ்பத்திரி

ஆனால் துபாயில் அவருக்கு வெறும் 20 நாள்தான் லீவு தந்தனர்.. இந்த 20 நாளில் ஃபிளைட்டில் போய் வரவே லீவு கழிந்துவிடும்.. அம்மாவுடன் ஆஸ்பத்திரியிலோ அல்லது அருகில் இருந்தோ எப்படி கவனித்து கொள்வது என்று யோசித்தார்.. பலமுறை லீவு நாட்கள் அதிகமாக வேண்டும் என்று கேட்டு பார்த்தும் கிடைக்கவில்லை. அதனால், அம்மாவுக்காக தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பினார் அமீர்.

 விமானங்கள்

விமானங்கள்

இதற்கு நடுவில் கொரோனா பீதி காரணமாக ஃபிளைட்களும் முடக்கப்பட்டிருந்தன.. எப்படி எப்படியோ முயற்சி செய்து, கடைசியில் கடந்த மே 13ம் தேதிதான் இந்தியா வந்தார்.. ஃபிளைட்டில் இருந்து இறங்கியதுமே தனிமைப்படுத்திவிட்டனர்.. அந்த வழக்கமான பரிசோதனை என்பதால், 10 நாட்களுக்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் அமீர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

எப்போது இந்த 10 நாள் முடியும் என்று காத்து கொண்டே இருந்தார்.. இறுதியாக, அம்மாவுக்கு போன் செய்யலாம் என்று முயன்றபோது, அதிர்ச்சியில் உறைந்தார். அவரது அம்மா கடந்த சனிக்கிழமையே இறந்துவிட்டார்களாம்.. இந்த தகவலை போனில் அவரது சொந்தக்காரர் சொன்னதுமே கதறி அழுதார் அமீர்.. அவரை தேற்றவும் ஆள் இல்லை.

அனுமதி

அனுமதி

பிறகு, மத்திய அரசு வெளியிட்ட வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்புவர்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை சுட்டிக்காட்டி, அம்மாவின் முகத்தை கடைசியாக பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டிருக்கிறார்.. ஆனால் அவர்களும் அனுமதி தரவில்லை என்று சொல்லப்படுகிறது.

சோகம்

சோகம்

அம்மாவுடன் இருக்கலாம், அம்மா பக்கத்திலேயே இருந்து கவனித்து கொள்ளலாம் என்றுதான் வேலையைகூட ராஜினாமா செய்துவிட்டு வந்தார்.. ஆனால் அமீரால் கடைசிவரை அவரது அம்மா முகத்தை பார்க்க முடியாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. அமீரின் இழப்புக்கும், சோகத்துக்கும், ஏமாற்றத்துக்கும் யாராலும் ஆறுதல் சொல்லவே முடியவில்லை!!!

English summary
coronavirus: son leaves job in dubai to meet his mother gets news of her death
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X