டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க 1 வருடம் ஆகும்.. ஆனாலும் இந்தியாவிற்கு ஒரு குட் நியூஸ்.. நம்பிக்கை

கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வரும் நேரத்தில், இந்தியா இதில் இருந்து விரைவில் மீள வாய்ப்புள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வரும் நேரத்தில், இந்தியா இதில் இருந்து விரைவில் மீள வாய்ப்புள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான காரணங்களையும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிற்கு இது நல்ல செய்தியாக வந்துள்ளது.

Recommended Video

    Total 28 COVID-19 cases in India|இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு... அதிர்ச்சி தகவல்

    சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு இதுவரை 3317 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் இதுவரை 97100 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

    இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி உள்ளது. டெல்லியில் ஒருவருக்கும், ஹைதராபாத்தில் ஒருவருக்கும் இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இன்னும் பலருக்கு வைரஸ் தாக்குதல் உள்ளது. மொத்தம் 28 பேருக்கு இந்தியா முழுக்க வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா எப்படி

    கொரோனா எப்படி

    இந்த நிலையில் கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வரும் நேரத்தில், இந்தியா இதில் இருந்து விரைவில் மீள வாய்ப்புள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான காரணங்களையும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க குறைந்தது ஒரு வருடமாவது ஆகும். முழுதாக மருந்து கண்டுபிடித்தாலும் அதை சோதனைக்கு உட்படுத்த நேரம் ஆகும்.

    மனிதர்கள்

    மனிதர்கள்

    நேரடியாக மனிதர்கள் மீது இந்த வைரஸை சோதனை செய்ய முடியாது. இதனால் முதலில் விலங்குகள் மீது சோதனை செய்வார்கள். அதன்பின் மனிதர்கள் மீது சோதனை செய்வார்கள். பின்புதான் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்கள். இதை பயன்பாட்டிற்கு கொண்டு வர எப்படியும் ஒரு வருடம் ஆகிவிடும் என்கிறார்கள். இதனால் இப்போதைக்கு முழுதாக மருந்து கண்டுபிடிப்பது சிரமம்.

    ஆஸ்திரேலியா

    ஆஸ்திரேலியா

    ஆனால் ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும் சில மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை தடுப்பூசிகள் போன்ற மருந்துகள் ஆகும். இந்த மருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது. அதே சமயம் இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த வைரஸ் வேகம் குறைய வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்த வைரஸ் அதிக வெப்பநிலையில் தாக்கு பிடிக்க முடியாது. குளிர் காலத்தில் மட்டுமே இது வேகமாக பரவும்.

    வெயில் காலம்

    வெயில் காலம்

    வெயில் காலத்தில் இது அவ்வளவு வேகமாக பரவாது. எளிதாக இந்த வைரஸ் வெயிலில் இறந்துவிடும். சூடு காரணமாக இதன் பரவும் தன்மையில் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளனர். இதனால், இந்தியாவில் ஏப்ரலுக்கு பிறகு இந்த வைரஸ் வேகம் குறையும். இந்தியாவில் இதனால் மக்கள் பாதிப்பு குறையும் என்கிறார்கள். தென்னிந்தியாவிலும் இந்த வைரஸ் வேகம் குறைய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    ஏப்ரல் மாதம்

    ஏப்ரல் மாதம்

    ஏப்ரல், மே மாதங்களில் தென்னிந்தியாவில்தான் வெயில் அதிகமாக இருக்கும். அதனால் தென்னிந்தியாவில் இந்த வைரஸ் பரவ வாய்ப்பு குறைவு. கேரளா குளிர் பிரதேசம் என்பதால்தான் அங்கு கடந்த மாதம் வைரஸ் பரவியது. இனி வரும் நாட்களில் இந்தியா இதில் இருந்து தப்பிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த மோசமான நேரத்தில் இந்தியாவிற்கு இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Coronavirus: Summer will help India to recover from COVID - 19 soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X