டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 3,722 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78,003

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,722 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78,003 ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

covid19india.org புள்ளிவிவரப்படி மகாராஷ்டிராவில் மிக அதிகமாக 25,922 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இங்கு நேற்று ஒரே நாளில் 1495 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் மட்டும் 975 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.

Coronavirus tallu in India cross 78,000

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 9,268 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டும் 566 பேர் உயிரிழந்தும் உள்ளனர். 3-வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்தம் 9,227 ஆக அதிகரித்திருக்கிறது. ஆனால் கொரோனா மரணங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 64 பேர் இதுவரை கொரோனாவால் இறந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,722 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 78.003 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26,235 ஆகவும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2549 ஆகவும் உள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, குஜராத்தை தொடர்ந்து தமிழகம் 3-வது இடத்தில் இருந்து வருகிறது.

உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் 3 லட்சத்தை எட்டியது- பாதிப்பு 45 லட்சத்தை நெருங்கியது உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் 3 லட்சத்தை எட்டியது- பாதிப்பு 45 லட்சத்தை நெருங்கியது

உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் 3 லட்சத்தை எட்டியது- பாதிப்பு 45 லட்சத்தை நெருங்கியது

English summary
According to covid19india.org report, the total number of coronavirus tally in India has jumped to 78,055.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X