டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆக்டிவ் நோயாளிகள்.. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக பேருக்கு கொரோனா.. மஹாராஷ்டிராவை முந்தியது!

இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பெற்று அதிர்ச்சி அளித்துள்ளது.

Recommended Video

    How technology helps Tamilnadu in Contact tracing method so far?

    இந்தியாவில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. 2742 பேருக்கு நாடு முழுக்க கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதில் தற்போது 2374 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 192 பேர் இதில் உடல்நிலை சரியாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.

    நாடு முழுக்க 74 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மட்டும் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ஏப்ரல் 4ல் உலகிற்கு ஒரு நற்செய்தி கிடைக்குமாம் - கொரோனா பீதியிலும் பஞ்சாங்கம் ஆறுதல் செய்தி! ஏப்ரல் 4ல் உலகிற்கு ஒரு நற்செய்தி கிடைக்குமாம் - கொரோனா பீதியிலும் பஞ்சாங்கம் ஆறுதல் செய்தி!

    மகாராஷ்டிரா நிலை என்ன

    மகாராஷ்டிரா நிலை என்ன

    இந்தியாவில் மகாராஷ்டிராவில்தான் மாலை வரை அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதித்து இருந்தது. அங்கு 423 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதில் 21 பேர் பலியாகி விட்டனர். 42 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். தற்போது 360 பேர் மட்டுமே தற்போது அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தமிழகம்

    தமிழகம்

    ஆனால் தமிழ்நாட்டில், மொத்தம் 411 நோயாளிகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் பலியாகி உள்ளார். 6 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். தற்போது 404 பேர் தமிழகத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினமும் பலர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தமிழகம் இந்த பட்டியலில் அதிக ஆக்டிவ் நோயாளிகளை கொண்டு முதலிடம் பிடித்துள்ளது.

    பலி எண்ணிக்கை

    பலி எண்ணிக்கை

    டெல்லியில் 293 நோயாளிகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர். இதில் 4 பேர் பலியாகி விட்டனர். 8 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். தற்போது 281 பேர் மட்டுமே அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரளாவில் 286 நோயாளிகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர். இதில் 2 பேர் பலியாகி விட்டனர். 28 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். தற்போது 256 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கேரளா எப்படி

    கேரளா எப்படி

    உத்தர பிரதேசத்தில் 172 நோயாளிகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர். இதில் 2 பேர் பலியாகி விட்டனர். 17 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். தற்போது 153 பேர் மட்டுமே அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.ஆந்திர பிரதேசம் 161 நோயாளிகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் பலி. 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். 158 பேர் மட்டுமே தற்போது அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ராஜஸ்தான் எப்படி உள்ளது

    ராஜஸ்தான் எப்படி உள்ளது

    ராஜஸ்தான் 154 நோயாளிகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர்.யாரும் பலி இல்லை. 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். 151 பேர் மட்டுமே தற்போது அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.தெலுங்கானா 154 நோயாளிகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர். இதில் 9 பேர் பலியாகி விட்டனர். 17 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். 128 பேர் மட்டுமே தற்போது அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கர்நாடகாவில் நிலை என்ன

    கர்நாடகாவில் நிலை என்ன

    கர்நாடகா 125 நோயாளிகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர். இதில் 3 பேர் பலியாகி விட்டனர். 11 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். தற்போது 111 பேர் மட்டுமே அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மத்திய பிரதேசத்தில் 107 நோயாளிகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர். இதில் 8 பேர் பலியாகி விட்டனர். யாரும் டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை. தற்போது 99 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    English summary
    Coronavirus: Tamilnadu comes to the top in the list of active patients in whole India, beats Maharashtra.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X