டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா டெஸ்ட்டில் புதிய மைல்கல் - ஒரே நாளில் 2.15 லட்சமாக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் பரிசோதனையின் அளவு தினசரியும் 2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜூன் 23ஆம் தேதி வரை 73 லட்சத்து 50 ஆயிரம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கோவிட்-19 பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாக ஐ.சி.எம்.ஆர் செய்தி வெளியிட்டுள்ளது. ஜூன் 23ஆம் தேதி வரை 73 லட்சத்து 50 ஆயிரம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. நாளொன்று 4 ஆயிரம் மாதிரிகள் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது படிப்படியாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க கொரோனா காரணமாக 9,342,510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் மொத்தம் 159,935 பேருக்கு உலகம் முழுக்க கொரோனா ஏற்பட்டது. இதுவரை கொரோனா காரணமாக 478,903 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை உலகம் முழுக்க 5,036,330 பேர் குணமடைந்து உள்ளனர்.

Coronavirus Testing: For The First Time India Tested Over 2 Lakh Covid Tests In A Day

சென்னையில் இன்று ஒரே நாளில் 1654 பேருக்கு கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ளது. புதன்கிழமையன்று மட்டும் 29,655 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 9 லட்சத்து 30 ஆயிரத்து 367 பேருக்கு இதுவரை பரிசோதனைகள் நடந்துள்ளன.

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து படிப்படியாக பரிசோதனையின் அளவை அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 2.15 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தற்போது நாள்தோறும் பரிசோதிக்கப்படும் மாதிரிகள் 2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், நாள்தோறும் 3 லட்சம் மாதிரிகள் வரை பரிசோதிக்க முடியும்.

கொரோனா- உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை.. தன்னிச்சையாக செயல்பட்டால் எப்படி?.. குட்டரேஸ் வேதனைகொரோனா- உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை.. தன்னிச்சையாக செயல்பட்டால் எப்படி?.. குட்டரேஸ் வேதனை

கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளைப் பரிசோதிக்க உருவாக்கப்பட்டுள்ள பரிசோதனை மையத்தின் எண்ணிக்கையும் ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 730 பரிசோதனைக் கூடங்கள் அரசின் வசம் உள்ளன. 270 தனியார் பரிசோதனைக் கூடங்களாகும். ஆர்டி பிசிஆர் ஆய்வுக்கூடம் 557, ட்ரூநெட் லேப் 363, சிபிஎன்ஏஏடி லேப் 80 உள்ளன.

ஒட்டுமொத்தமாக செவ்வாய்க்கிழமை வரை அதாவது ஜூன் 23ஆம் தேதி வரை 73 லட்சத்து 52 ஆயிரத்து 911 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 15 ஆயிரத்து 195 மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய போது கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாளொன்றுக்கு வெறும் 4ஆயிரம் மாதிரிகள் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டன. ஜூன் 23ஆம் தேதியன்று 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது புதிய மைல்கல் ஆகும்.

English summary
India has conducted over 2 lakh tests on June 23 a key milestone as the country scales up testing manifold and begins marking a major shift in its testing strategy supplementing the real-time reverse transcription polymerase chain reaction (RT-PCR) test with the newly introduced antigen test.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X