டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிக மோசமான நாள்.. பல மாநிலங்களில் இதுவரை இல்லாத கொரோனா கேஸ்கள்.. அதிர்ச்சி புள்ளி விவரம்!

இந்தியாவில் சனிக்கிழமை அன்று பல மாநிலங்களில் மிக அதிக அளவில் கேஸ்கள் பதிவாகி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் சனிக்கிழமை அன்று பல மாநிலங்களில் மிக அதிக அளவில் கேஸ்கள் பதிவாகி உள்ளது. கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு கேஸ்கள் பதிவாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை 1,31,385 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 3,868 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 73,129 பேர் ஆக்டிவ் நோயாளிகள் இருக்கிறார்கள். 54,380 பேர் இதுவரை குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் 2450 பேர் இந்தியாவில் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் நான்கு முறை லாக்டவுன் நீட்டிக்கப்பட்ட பின்பும் கூட தொடர்ந்து கொரோனா கேஸ்கள் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. கொரோனா தினமும் வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்த 4 வழித்தடங்களில் பயணிகள் ரயிலை இயக்குங்கள்.. தென்னக ரயில்வேவிற்கு தமிழக அரசு கோரிக்கை!இந்த 4 வழித்தடங்களில் பயணிகள் ரயிலை இயக்குங்கள்.. தென்னக ரயில்வேவிற்கு தமிழக அரசு கோரிக்கை!

தமிழகம் நிலை

தமிழகம் நிலை

தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக மீண்டும் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது.இன்று வரை சென்னையில் 9989 பேருக்கு இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 15512 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா நிலை என்ன

கர்நாடகா நிலை என்ன

கர்நாடகாவிலும் இன்று ஒரே நாளில் 216 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்றுதான் ஒரே நாளில் மிக அதிக அளவில் கேஸ்கள் அதிகரித்துள்ளது. அங்கு 1960 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் 187 பேர் மகாராஷ்டிராவில் இருந்து சமீபத்தில் கர்நாடகா வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் இதுவரை 42 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1307 என்ற நிலையில் உள்ளது.

கேரளா நிலை

கேரளா நிலை

கேரளாவில் இன்று ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அம்மாநில மக்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 31 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் 7 சுகாதார பணியாளர்கள் உட்பட 13 பேர் மாநிலத்திற்குள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் மொத்தம் 794 பேருக்கு கொரோனா உள்ளது. அங்கு 275 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது. இன்று 3 பேர் குணமாகி உள்ளனர். மொத்தமாக 515 பேர் குணமாகி உள்ளனர். அங்கு மொத்தம் இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அசாம் நிலை

அசாம் நிலை

இன்று அசாமில் மொத்தம் ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் ஏற்பட்ட அதிக கேஸ்கள் இதுதான். அங்கு மொத்த கேஸ்கள் 324 ஆக அதிகரித்துள்ளது. 70 கேஸ்களில் மொத்தம் 44 பேர் கவுகாத்தியில் தனிமை முகாமில் இருந்து ஏற்பட்ட கேஸ்கள் ஆகும். அதேபோல் சிக்கிமில் இன்று முதல் கொரோனா கேஸ் பதிவானது.

குஜராத் நிலை

குஜராத் நிலை

குஜராத்தில் அஹமதாபாத்தில் மொத்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு மொத்தம் 10001 கேஸ்கள் உள்ளது. அங்கு ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 5468 ஆக உயர்ந்துள்ளது. அஹமதாபாத்தில் 669 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் மொத்தம் 13,669 கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 396 கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா நிலை

மகாராஷ்டிரா நிலை

மகாராஷ்டிராவில் இன்று மட்டும் 2608 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 47,190பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 32,209 கேஸ்கள் உள்ளனர். 821 பேர் மகாராஷ்டிராவில் இன்று குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் அங்கு 13,404 பேர் குணமடைந்துள்ளனர். 60 பேர் இன்று மகாராஷ்டிராவில் பலியாகி உள்ளனர். அங்கு மொத்தம் 1,577 பேர் பலியாகி உள்ளனர்.

English summary
Coronavirus: Total cases in India reaches 1,31,385, Maharashtra crosses 47 thousand totally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X