டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதிர்ப்பார்க்கவில்லை.. 2.3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. இத்தாலியை முந்திய இந்தியா.. 6வது இடம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் மொத்த கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை 236184 ஆகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இத்தாலியை இந்தியா முந்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி இறுதியில் இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியது. அதன்பின் மிக மெதுவாக கொரோனா கேஸ்கள் உயர தொடங்கியது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்தியாவில் நான்கு முறை லாக்டவுன் கொண்டு வரப்பட்டது.

Coronavirus: Total cases in India reaches 236184 , the country reaches 6th place

அதேபோல் தற்போது கட்டுப்பாட்டு பகுதியில் மட்டும் ஐந்தாவது லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் மொத்த கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை 236184 ஆகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இத்தாலியை இந்தியா முந்தியுள்ளது.

இந்தியாவில் உலக அளவில் கொரோனா பாதிப்பில் 6வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவிற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா,பிரேசில், ஸ்பெயின், யுகே ஆகிய நாடுகள் உள்ளது. இந்தியாவில் கொரோனா காரணமாக 6649 பேர் பலியாகி உள்ளனர். 116290 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். 113233 பேர் குணமடைந்து உள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிராதான் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 80299 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 2849 பேர் அங்கு பலியாகி உள்ளனர். அடுத்ததாக தமிழ்நாட்டில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் 20694 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 235 பேர் அங்கு பலியாகி உள்ளனர். டெல்லியில் 26334 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 708 பேர் அங்கு பலியாகி உள்ளனர்.

கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்... சென்னைக்கு மட்டும் 5 அமைச்சர்களை களமிறக்கிய அரசு கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்... சென்னைக்கு மட்டும் 5 அமைச்சர்களை களமிறக்கிய அரசு

குஜராத்தில் 19119 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 1190 பேர் அங்கு பலியாகி உள்ளனர். ராஜஸ்தானில் 10084 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 218 பேர் அங்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Coronavirus: Total cases in India reaches 236184 , the country reaches 6th place in the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X