டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா விழிப்புணர்வு.. ஏப்ரல் 5 அன்று 9 நிமிடம் விளக்குகளை அணையுங்கள்.. பிரதமர் மோடி கோரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவுக்கு எதிராக ஏப்ரல் 5-ந் தேதி இரவு 9 மணிக்கு அனைத்து விளக்குகளையும் மக்கள் தங்கள் வீடுகளில் 9 நிமிடங்கள் அணைத்து வைக்க வேண்டும், என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

Recommended Video

    Modi speech | Turn off your lights in home, Modi says

    இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. மொத்தம் 2545 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 209 ஆக உயர்ந்துள்ளது.

    இந்தியாவில் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது . இதையடுத்து பிரதமர் மோடி இன்றும் தொலைக்காட்சியில் தோன்றி மக்கள் முன்னிலையில் பேசினார்,அதில் , இன்று லாக்டவுனின் 10-வது நாள்- பொதுமக்கள் இணைந்து கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும்.

    மரண பயம் நீக்கும் மிருத்யுஞ்ஜய பிரதோஷம் - ஞாயிறு 9 மணிக்கு மோடி விளக்கேற்ற சொன்னதன் காரணம்மரண பயம் நீக்கும் மிருத்யுஞ்ஜய பிரதோஷம் - ஞாயிறு 9 மணிக்கு மோடி விளக்கேற்ற சொன்னதன் காரணம்

    மோடி பேச்சு

    மோடி பேச்சு

    ஊரடங்கை கடைபிடிப்பதில் நாம் முன்னுதாரணமாக இருந்து வருகிறோம். நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி. இதில் மிக சிறந்த ஒழுங்கை நீங்கள் கடைப்பிடித்து உள்ளீர்கள்.

    நாம் ஒன்றாக போராடுகிறோம்

    நாம் ஒன்றாக போராடுகிறோம்

    உலக நாடுகள் நம்மை பார்த்து வியந்து, நம்மை போல ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே வீட்டில் இருக்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். நாம் எப்படி இதற்கு எதிராக போராட முடியும் என்று நினைக்கிறார்கள். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நாம் வீட்டில் இருக்கிறோம். நாம் கொரோனாவிற்கு எதிராக ஒன்றாக போராடுகிறோம்.

    கொரோனா என்னும் இருளுக்கு எதிராக போராடுவோம்

    கொரோனா என்னும் இருளுக்கு எதிராக போராடுவோம்

    கொரோனா என்னும் இருளுக்கு எதிராக நாம் ஒன்றாக இணைந்து செய்லபட போகிறோம். மிகவும் வெளிச்சமான எதிர்காலத்தை நோக்கி நாம் செல்ல போகிறோம். கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டு வரும் அடித்தட்டு மக்களை நாம் கவனிக்க வேண்டும். அவர்களுக்கு நாம் உதவ வேண்டும்.

    எல்லோரும் விளக்குகளை அணைப்போம்

    எல்லோரும் விளக்குகளை அணைப்போம்

    இந்தியாவின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிக்கு நன்றி சொல்லவும், நம்முடைய கூட்டு ஆன்மாவை வலுப்படுத்தவும் கொரோனாவுக்கு எதிராக வரும் 5-ந் தேதி இரவு 9 மணிக்கு அனைத்து விளக்குகளையும் அணைத்து வைக்க வேண்டும். வரும் 5-ந் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்குகளை அனைத்து செல்போன், டார்ச்லைட்டில் வெளிச்சம் ஏற்படுத்துங்கள் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

    English summary
    Coronavirus: Turn off your lights in home on this sunday says PM Modi in his speech.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X