டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பீதி.. தன்னைத்தானே தனிமைப்படுத்திய மத்திய அமைச்சர்.. வெளியான பரபரப்பு தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பரவி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டிலேயே இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Recommended Video

    'கொரோனா... இன்று!' 'ஒன் இந்தியா' டெய்லி ஸ்பெஷல் அப்டேட்!

    கேரளாவை சேர்ந்தவர் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன். இவர் கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்காமல் இருந்துவருகிறார். இதுதொடர்பாக ஊடகத்தினர் விசாரித்தபோது ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

    Coronavirus: Union Minister V Muraleedharan is in self quarantine

    முரளிதரன் திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், கொரோனா வைரஸ் தொடர்பாக தனது ரத்தத்தை பரிசோதனைக்கு அளித்துள்ளதாகவும், அதில் வைரஸ் தாக்கம் இல்லை என்று ரிசல்ட் வந்த பிறகுதான் அவர் வெளியே வருவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    3 மாதங்கள் ஆகிவிட்டது.. இன்னும் பதில் கிடைக்காத அந்த ஒரு கேள்வி.. மர்மம் விலகாத கொரோனா வைரஸ்! 3 மாதங்கள் ஆகிவிட்டது.. இன்னும் பதில் கிடைக்காத அந்த ஒரு கேள்வி.. மர்மம் விலகாத கொரோனா வைரஸ்!

    கேரளாவில், கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இது தொடர்பாக மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக முரளிதரன் சமீபத்தில் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அவர் ஆய்வு செய்து திரும்பிய பிறகு அந்த மருத்துவமனையில் இருந்த நோயாளி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தனக்கும் அந்த நோய் பரவி இருக்கக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை அடிப்படையில் முரளிதரன் தன்னைத்தானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு இருக்கிறார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மத்திய அமைச்சர் ஒருவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    V Muraleedharan, Union Minister of State for External Affairs is in self quarantine in Trivandrum, Kerala for COVID19
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X