டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேகமாக உயரும் கிராப்.. இந்தியாவில் ஒரே நாளில் 484 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 2543 ஆக உயர்வு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 484 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2543 ஆக உயர்ந்தது. இது வரை நாடு முழுவதும் 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

Recommended Video

    கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்? அதிர்ச்சி ரிப்போர்ட்

    உலகையே அச்சுறுத்தி கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தற்போது வேகமாக பரவி வருகிறது. கடந்த மார்ச் 28ம் தேதி 1000த்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை அதன்பிறகு அடுத்தடுத்து மின்னல் வேகத்தில் அதிகரித்தது.

    இதன் படி நாடு முழுவதும் மார்ச் 29ம் தேதி 110 பேருக்கும், மார்ச் 30ம் தேதி 208 பேருக்கும், மார்ச் 31ம் தேதி 288 பேருக்கும் கொரோனா வைரஸ் பரவியது.

    204 நாடுகளில் கொரோனா.. 10,00,000த்தை தாண்டியது.. 53 ஆயிரம் பேர் பலி, பிரான்ஸ், ஸ்பெயினில் ஷாக்! 204 நாடுகளில் கொரோனா.. 10,00,000த்தை தாண்டியது.. 53 ஆயிரம் பேர் பலி, பிரான்ஸ், ஸ்பெயினில் ஷாக்!

    வேகமாக உயரும் கிராப்

    வேகமாக உயரும் கிராப்

    ஏப்ரல் 1ம் தேதி அன்று 424 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அதிரடியாக 2000த் கடந்தது. அன்று 2059 ஆக உயர்ந்தது. ஏப்ரல் 2ம் தேதி அன்று நிலவரப்படி 484 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களி எண்ணிக்கை 2543 ஆக உயர்ந்துள்ளது. அதாவது இந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 900 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

    72 பேர் உயிரிழப்பு

    72 பேர் உயிரிழப்பு

    இதில் பாதிபேருக்கு சமூக பரவல் மூலம் கொரோனா பரவி இருக்கும் அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது உள்நாட்டிலேயே கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் 72 பேர் உயிரிழந்துள்ளளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மகாராஷ்டிரா முதலிடம்

    மகாராஷ்டிரா முதலிடம்

    நாட்டிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மாகாராஷ்டிரா 423 பேருடன் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் 309 பேருடன் தமிழகம் உள்ளது. 3வது இடத்தில் 293 பேருடன் டெல்லி உள்ளது. 4வது இடத்தில் 286 பேருடன் கேரளா உள்ளது. 5வது இடத்தில் 154 பேருடன் தெலுங்கானாவும், 6வது இடத்தில் 149 பேருடன் ஆந்திராவும், 7வது இடத்தில் 133 பேருடன் ராஜஸ்தானும், 126 பேருடன் 8வது இடத்தில் ராஜஸ்தானும், 9வது இடத்தில் 124 பேருடன் கர்நாடகாவும், 10வது இடத்தில் 107 பேருடன் மத்திய பிரதேசமும் உள்ளன.

    பாதிப்பு குறைவு

    பாதிப்பு குறைவு

    கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் 191 பேர் இதுவரை பூரண குணமடைந்துள்ளனர். 2280 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடும் போதும் கொரோனாவின் பாதிப்பும், உயிரிழப்பும் இந்தியாவில் மிக குறைவாகவே உள்ளது. இந்தியாவின் தட்பவெப்ப சூழல் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் சமூக விலகலை முறையாக கடைபிடிக்காத பல நாடுகளில் பாதிப்பு மிக அதிகமாகவே உள்ளது. எனவே அரசு அறிவுறுத்தியபடி சமூக விலகலை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம் ஆகும்.

    English summary
    Coronavirus update: Positive cases in inda rise to 2543, death toll at 72, tamil nadu 2nd places of Positive cases in inda
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X