டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல் இடத்தை நோக்கி இந்தியா.. 37.66 லட்சத்தை தாண்டிய பாதிப்பு.. ஒரே நாளில் 1025 பேர் பலி

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 37,66,108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் விரைவில் பிரேசிலை முந்தும் நிலைக்கு இந்தியா வந்துள்ளது. இதேபோல் தொற்று பாதிப்பில் 67 லட்சத்துடன் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவை முந்தலாம் என அச்சமும் நிலவுகிறது.

சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 258,89,824 பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 860,270 பேர் பலியாகி உள்ளனர்.

Coronavirus updates: A f: india may touch highest cases in world, now 3.7 m cases

உலகில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 18,171,342 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது உலகில் கொரோனா பாதிப்புடன் 6,858,212 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

உலகில் கொரோனா தொற்றில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. அங்கு கொரோனா தொற்றால் 62,57,171 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் நாட்டில் கொரோனா தொற்றால் 39,52,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3வது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 37,66,108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4வது இடத்தில் உள்ள ரஷ்யாவில் கொரோனா தொற்றால் 1,000,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு நாள் பாதிப்பை பொறுத்தவரை இந்தியா தொடர்ந்து பல நாட்களாக முதல் இடத்தில் உள்ளது. உலகிலேயே அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 78,169 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 41,889 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஒரு நாள் பாதிப்பில் 3வது இடத்தை பிடித்த அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 41,579 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கொரோனா பாதிப்பு உச்சம்- இந்தியர்கள் மலேசியா செல்ல செப்.7 முதல் தடை விதிப்பு கொரோனா பாதிப்பு உச்சம்- இந்தியர்கள் மலேசியா செல்ல செப்.7 முதல் தடை விதிப்பு

கொரோனாவால் பலி எண்ணிக்கையை பொறுத்தவரை உலகிலேயே மிக அதிகபட்சமாக நேற்று பிரேசிலில் 1166 பேர் பலியாகினர். 2வது இடத்தில் உள்ள அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் 1138 பேர் பலி உள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில கொரோனாவால் 1025 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அமெரிக்கா பிரேசிலைவிட வேகமாக உயர்வதால் பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா முதல் இடத்தை விரைவில் எட்டினாலும் ஆச்சர்யம் இல்லை என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

English summary
With 78,169 people testing positive, India's Covid-19 tally mounted to 37,66,108, while recoveries surged to 28,39,882 on Tuesday pushing the recovery rate to 76.94 per cent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X