டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆந்திராவில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் 7 பேருக்கு புதிதாக பாதிப்பு.. ஷாக் லிஸ்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 12மணி நிலவரப்படி 1417 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.

Recommended Video

    இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை 785777 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 37815 பேர் உயிரிழந்துள்ளனர் 165607 பேர் குணமடைந்துள்ளனர்.

    உலகிலேயே மிக அதிகபட்மாக அமெரிக்காவில் சுமார் 1.50 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே மிக அதிகபட்சமாக இத்தாலியில் மிக அதிகபட்சமாக இதுவரை சுமார் 11500 பேர் இறந்துள்ளார்கள்.

    இத்தாலியில் அதிர்ச்சி.. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஒரே நாளில் 812 பேர் உயிரிழப்பு இத்தாலியில் அதிர்ச்சி.. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஒரே நாளில் 812 பேர் உயிரிழப்பு

    47 பேர் பலி

    47 பேர் பலி

    இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இன்று காலை மட்டும் 70 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பும் கணிசமாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1417 ஆக அதிகரித்துள்ளது. தெலுங்கானாவில் புதிதாக இறந்த 6 பேர், கேரளாவில் ஒருவர் உள்பட மொத்தம் நாடு முழுவதும் 47 பேர் இறந்துள்ளனர்.

    248 பேர் பாதிப்பு

    248 பேர் பாதிப்பு

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 1166 பேர் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள் 138 பேர் இதுவரை பூரண குணம் அடைந்துள்ளனர். நாட்டிலேயே மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர். 39 பேர் குணம் அடைந்துள்ளனர்.

    234 பேர் பாதிப்பு

    234 பேர் பாதிப்பு

    2வது இடத்தில் கேரளா உள்ளது. இங்கு கொரோனாவால் 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் உயிரிழந்துள்ளார்கள். 20 பேர் குணமடைந்துள்ளனர். 213 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மூன்றாவது இடத்தில் டெல்லி உள்ளது. இங்கு 97 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2 பேர் இறந்துள்ளனர். 6 பேர் குணம் அடைந்துள்ளனர்.

    உபியில் 101 பேர்

    உபியில் 101 பேர்

    உத்தரப்பிரதேசத்தில் 101 பேரும், கர்நாடகாவில் 91 பேரும், ராஜஸ்தானில் 83 பேரும், தெலுங்கானாவில் 77 பேரும், குஜராத்தில் 73 பேரும், தமிழகத்தில் 74 பேரும், ஜம்மு காஷ்மீரில் 49 பேரும், மத்திய பிரதேசத்தில் 66 பேரும் , பஞ்சாபில் 41 பேரும், ஹரியானாவில் 36 பேரும், ஆந்திராவில் 40 பேரும், மேற்கு வங்கத்தில் 26 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரியில் ஒருவர்

    புதுச்சேரியில் ஒருவர்

    பீகாரில் 16 பேரும், சண்டிகரில் 13 பேரும், லடாக்கில் 13 பேரும் அந்தமானில் 10 பேரும் சட்டீஸ்கரில் 8 பேரும், உத்தரகாண்டில் 7 பேரும், கோவாவில் 5 பேரும், இமாச்சல பிரதேசத்தில் 3 பேரும், ஒடிசாவில் 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர், மிசோரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பை பொறுத்தவரை மகாராஷ்டிராவில் 10 பேரும், கேரளாவில் 2 பேரும், டெல்லியில் இரண்டு பேரும், கர்நாடகாவில் 3 பேரும், தெலுங்கானாவில் 8 பேரும், தமிழகத்தில் ஒருவரும், குஜராத்தில் 6 பேரும், மத்திய பிரதேசத்தில் 4 பேரும், ஜம்மு காஷ்மீரில் 2 பேரும், பஞ்சாப்பில் 3 பேரும், மேற்கு வங்கத்தில் 4 பேரும் பீகாரில் ஒருவரும், இமாச்சலில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

    English summary
    india reports the total number of infections surged 1347, totaly 44 died
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X