டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா எதிர்ப்பு.. யுஎஸ்எய்ட் (USAID) மூலம் இந்தியாவிற்கு 2.9 மில்லியன் டாலர் வழங்கும் அமெரிக்கா!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவில் இருந்து மீள்வதற்காக அமெரிக்க அரசு தனது யுஎஸ்எய்ட் (USAID - U.S. Agency for International Development) மூலம் இந்தியாவிற்கு 2.9 மில்லியன் டாலர் தருவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மார்ச் 28ம் தேதி வெளியான இந்த அறிவிப்பிற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

Recommended Video

    எங்களுக்கு அந்த மருந்து தேவை.. ஹைட்ராக்சிகுளோரோகுய்னுக்கு குறி வைத்த டிரம்ப்.. மோடியிடம் கோரிக்கை

    அமெரிக்க அரசின் யுஎஸ்எய்ட் (USAID - U.S. Agency for International Development) உலகம் முழுக்க பல்வேறு நாடுகளுக்கு பொருளாதார மற்றும் மருத்துவ ரீதியான உதவிகளை செய்யும் அமைப்பு ஆகும். கடந்த 20 வருடங்களில் இந்த அமைப்பு வழியாக இந்தியாவிற்கு 3 பில்லியன் டாலர் வரை அமெரிக்கா உதவி செய்துள்ளது. தற்போது கொரோனா நேரத்தில் இந்தியாவிற்கு அமெரிக்கா உதவ முடிவு செய்துள்ளது.

    Coronavirus: US governments USAID provides totally $2.9M to India to fight COVID-19

    யுஎஸ்எய்ட் (USAID) வழங்கும் இந்த நிதியில் 2.4 மில்லியன் டாலர் இந்தியாவில் மருத்துவ திட்டங்களை பலப்படுத்துவதற்கு பயன்படும். அமெரிக்காவில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலையின் Jhpiego என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த பணிகள் செய்யப்படுகிறது. அதேபோல் இதில் 5 லட்சம் டாலர் உலக சுகாதார மையத்திற்கு வழங்கப்படும். இதன் மூலம் கொரோனாவிற்கு எதிரான பணிகளை இந்தியா எளிதாக செய்ய முடியும். கொரோனாவிற்கு எதிராக உள்ளூரில் பணிகளை மேற்கொள்ள தேவையான உபகரணங்கள் இதன் மூலம் வாங்கப்படும்.

    கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் முயற்சிகளை பாராட்டிய இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னத் ஐ ஜஸ்டர், யுஎஸ்எய்ட் (USAID) மூலம் இந்தியாவிற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று கூறினார். அவர் தனது பேட்டியில், உலக நாடுகளும், அமைப்புகளும் ஒன்றாக சேர்ந்து செயல்பட்டால்தான் உலகம் முழுக்க பெரிய பிரச்சனையாக மாறியுள்ள கொரோனா தாக்குதலை எதிர்கொள்ள முடியும்.

    அமெரிக்க அரசு சார்பாக யுஎஸ்எய்ட் (USAID), மற்றும் மத்திய நோய் கட்டுப்பாட்டு மையம் (Centers for Disease Control and Prevention), அமெரிக்க சுகாதாரத்துறை ஆகியவை ஒன்றாக இணைந்து இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறது. கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் பணிகளை முடுக்கிவிடும் வகையில் அமெரிக்கா இந்த உதவிகளை மேற்கொண்டு வருகிறது.

    கடந்த பல வருடங்களாக பொது சுகாதாரத்தில் உலக நாடுகளுக்கு அமெரிக்கா தீவிரமாக உதவி வருகிறது. 2009ல் இருந்து அமெரிக்க குடிமக்களின் வரி மூலமாக 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டு , உலகம் முழுக்க மருத்துவ தேவைக்கும், 70 பில்லியன் டாலருக்கும் அதிகமாக மனித சேவைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    அமெரிக்கா பிற நாடுகளுக்கு மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளுக்கும் இது போல நிதி உதவி வழங்கி வருகிறது.

    ● அமெரிக்கா 2019ல் மட்டும் உலக சுகாதார மையத்திற்கு 400 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வழங்கி உள்ளது. இது உலக சுகாதார மையத்திற்கு வழங்கப்பட்ட இரண்டாவது பெரிய தொகை ஆகும்.

    ● அமெரிக்கா, ஐநாவின் அகதிகள் அமைப்பிற்கு ( UN Refugee Agency - UNHCR) மொத்தம் 1.7 பில்லியன் டாலர்களை கடந்த 2019ல் வழங்கி உள்ளது. கொரோனா காரணமாக உலகம் முழுக்க அகதிகள் அதிகமாக வாய்ப்பு உள்ளதால், இந்த நிதி பெரிய அளவில் பயன்படும்.

    ● அமெரிக்கா அதேபோல் ஐநாவின் குழந்தைகள் நிதியகத்திற்கு (UN Children's Fund) 2019 மட்டும் $700 மில்லியன் டாலர் வழங்கி உள்ளது. யுனிசெஃப் பல ஆண்டுகளாக செய்து வரும் உயிர் காக்கும் நடவடிக்கைகளுக்கு இந்த நிதி உதவும். அதாவது, நோய்த்தடுப்பு பிரச்சாரங்கள் மற்றும் சுகாதார பயிற்சி மற்றும் உதவி போன்ற பணிகளுக்கு இந்த நிதி உதவும்.

    கொரோனா போன்ற தொற்று-நோய் உலகம் முழுக்க எல்லா இடங்களிலும் அச்சுறுத்த வாய்ப்புள்ளது. இதனால் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்காக மற்ற நன்கொடை அமைப்புகளை அமெரிக்கா அழைத்துள்ளது . யுஎஸ்எய்ட் (USAID - U.S. Agency for International Development) உலகம் முழுக்க பல்வேறு நாடுகளுக்கு பொருளாதார மற்றும் மருத்துவ ரீதியான உதவிகளை செய்தி வருகிறது.

    அமெரிக்காவின் யுஎஸ்எய்ட் (USAID - U.S. Agency for International Development) அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு , பொருளாதார பாதுகாப்பு, அமெரிக்காவின் உதவும் குணம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த யுஎஸ்எய்ட் (USAID - U.S. Agency for International Development) குறித்து தெரிந்து கொள்ள https://www.usaid.gov/india லிங்கை கிளிக் செய்யுங்கள்.

    கொரோனாவிற்கு எதிரான யுஎஸ்எய்ட் (USAID - U.S. Agency for International Development) நடவடிக்கை குறித்து தெரிந்துள்ள https://www.usaid.gov/coronavirus-covid-19 லிங்கை கிளிக் செய்யுங்கள்.

    English summary
    Coronavirus: US government's USAID provides totally of $2.9M to India government to fight COVID-19.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X