டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிசம்பருக்குள் கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிடும்- 2 மாதங்களில் விலை நிர்ணயம்: சீரம் இன்ஸ்டிடியூட்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தடுப்பு மருந்தானது டிசம்பருக்குள் தயாராகிவிடும் என்றும் 2 மாதங்களில் இந்த தடுப்பூசிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுவிடும் என்றும் சீரம் இன்ஸ்டிடியூட் (Serum Institute of India) தலைமை செயல் அதிகாரி அதர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

புனேவை தலைமையிடமாகக் கொண்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, கொரோனா தடுப்பு மருந்தில் தீவிரம் காட்டி வருகிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் AstraZeneca நிறுவனம் கொரோனா மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இதில் சீரம் இன்ஸ்டிடியூட்டும் இணைந்துள்ளது.

Coronavirus Vaccine Likely to Be Ready by End of 2020, says Serum Institute of India

கொரோனா தடுப்பு மருந்து எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது தொடர்பாக சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை செயல் அதிகாரி அதர் பூனாவாலா கூறியதாவது:

நடப்பான்டின் இறுதிக்குள் கொரோனா தடுப்பு மருந்து நடைமுறைக்கு வந்துவிடும். சில ஆயிரம் நோயாளிகளுக்கு இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

வேலை இல்லையா? கவலை வேண்டாம்.. இனி சுயதொழில் தான் எதிர்காலமே!வேலை இல்லையா? கவலை வேண்டாம்.. இனி சுயதொழில் தான் எதிர்காலமே!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து இந்த பரிசோதனைகளை நடத்தி இருக்கிறோம். இந்த தடுப்பு மருந்தின் விலை தொடர்பாக இன்னும் 2 மாதத்தில் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதர் பூனாவாலா கூறினார். முன்னதாக, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 4,000 முதல் 5,000 நோயாளிகளுக்கு புனே மற்றும் மும்பையில் கொரோனா தடுப்பு மருந்து சோதனை நடத்தப்படும். ஆண்டு இறுதிக்குள் 300 மில்லியன் முதல் 400 மில்லியன் டோஸ் மருந்துகள் தயாரிக்கப்படுவதே தங்களது நிறுவனத்தின் இலக்கு என கூறியிருந்தார்.

English summary
Serum Institute of India Chief Executive Officer Adar Poonawalla has said the coronavirus vaccine may be ready by the end of this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X