டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனால் தாக்குதல்.. இது 2009ஐ விட மிக மோசமான பொருளாதார மந்தநிலை.. ஐஎம்எப் தலைவர் பேட்டி!

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உலகம் முழுக்க பொருளாதாரத்தில் மிக மோசமான மந்த நிலை ஏற்பட்டு உள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உலகம் முழுக்க பொருளாதாரத்தில் மிக மோசமான மந்த நிலை ஏற்பட்டு உள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கொரோனா: உலக அளவில் அமெரிக்காவில்தான் அதிக பாதிப்பு

    கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க பங்கு சந்தைகள் மோசமாக சரிவை சந்தித்து இருக்கிறது. அதேபோல் உற்பத்தி துறைகள் மிக மோசமான வீழ்ச்சியை கண்டுள்ளது. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் பொருளாதாரம் நினைக்க முடியாத அளவிற்கு சீர்குலைவை சந்தித்துள்ளது.

    இந்தியாவின் பொருளாதாரமும் இதனால் மோசமாக சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜிடிபி மோசமாக சரியாய் வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

    அனைத்திற்கும் தயாராக இருங்கள்.. கேரளாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா.. முதல்வர் பினராயி பேட்டி அனைத்திற்கும் தயாராக இருங்கள்.. கேரளாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா.. முதல்வர் பினராயி பேட்டி

    மோசமான மந்த நிலை

    மோசமான மந்த நிலை

    இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், நாம் இப்போது மிக மோசமான மந்த நிலையில் இருக்கிறோம். 2009ல் உலகம் முழுக்க நிலவிய பொருளாதார சீர்குழைவை விட மோசமான மந்த நிலை இது. உலகம் முழுக்க ஏழை நாடுகள், வளரும் நாடுகள் இதனால் மோசமாக பாதிக்கப்படும்.

    மிக மோசமாக பாதிப்பும்

    மிக மோசமாக பாதிப்பும்

    மிக அதிக அளவில் நிதி உதவி அளிக்கவில்லை என்றால் பல நாடுகள் இதில் இருந்து வெளியே வர முடியாது.உலகம் முழுக்க சந்தைகள் எல்லாம் திடீர் என்று முடங்கி உள்ளது. திடீர் என்று பல நாடுகள் உற்பத்தியை நிறுத்தி உள்ளது. இது அந்நாடுகளை மோசமாக பாதிக்கும். உலகம் முழுக்க இந்த பொருளாதார தேவைகளை குணப்படுத்த குறைந்தது 2.5 டிரில்லியன் டாலர் தற்போது தேவை.

    வெளியே வர முடியாது

    வெளியே வர முடியாது

    ஆனால் இது குறைந்தபட்ச தொகைதான். இதைவிட அதிக நிதி எதிர்காலங்களில் தேவைப்படும். உலகம் முழுக்க சந்தைகளில் கடந்த சில வாரங்களில் மாட்டு 83 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கொஞ்சம் இழப்பை சரி செய்ய முடியும். ஆனால் உள்நாட்டு நிதி மூலம் மட்டுமே எந்த நாடும் இந்த பொருளாதார சீர்குழைவில் இருந்து மீண்டும் வர முடியாது.

    80 நாடுகள் உதவி கேட்டுள்ளது

    80 நாடுகள் உதவி கேட்டுள்ளது

    பல நாடுகள் ஏற்கனவே மிக மோசமான கடனில் உள்ளது. உலகம் முழுக்க இருக்கும் வளரும் நாடுகளில் 80 நாடுகள் எங்களிடம் உதவி கேட்டு இருக்கிறது. கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, நிதி உதவி தேவை, அவசர நிதி தேவை என்று கேட்டுள்ளனர். அவர்களின் சொந்த சேமிப்பு இந்த சீர்குலைவில் இருந்து வெளியே வர அவர்களுக்கு உதவாது என்று எங்களுக்கு தெரியும், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Coronavirus: We are in a recession worst than 2009 says IMF Chief Kristalina Georgieva.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X