டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

12 மணி நேரத்தில் சாகும் கொரோனா.. மோடியின் மக்கள் ஊரடங்கு.. வாட்ஸ் ஆப்பில் உலாவும் செய்தி உண்மையா?

பிரதமர் மோடி கொரோனாவிற்கு எதிராக மக்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று மக்கள் ஊரடங்கு திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடியின் மக்கள் ஊரடங்கு திட்டத்தால் கொரோனா வைரஸ் எல்லாம் சாகும் என்று வாட்ஸ் ஆப்பில் தகவல் ஒன்று பரவி வருகிறது.

Recommended Video

    மார்ச் 22ம் தேதி காலை 7 முதல் இரவு 9 வரை மக்கள் வெளியே வர வேண்டாம் - மோடி வேண்டுகோள்

    பிரதமர் மோடி கொரோனாவிற்கு எதிராக மக்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று மக்கள் ஊரடங்கு திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார். இதற்காக ஞாயிற்றுக்கிழமை (நாளை) ஒருநாளை மோடி தேர்வு செய்துள்ளார்.

    கொரோனாவிற்கு எதிராக மார்ச் 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை சுய ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும், என்று மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடியின் இந்த ஐடியாவை பலரும் வரவேற்று இருக்கிறார்கள். இது வைரஸை ஓரளவு கட்டுப்படுத்த உதவும் என்று பலரும் கூறுகிறார்கள்.

    கொரோனா தடுப்பு- தமிழகத்தில் ஊரடங்கை அறிவித்து அமல்படுத்த வேண்டும்: ப. சிதம்பரம்கொரோனா தடுப்பு- தமிழகத்தில் ஊரடங்கை அறிவித்து அமல்படுத்த வேண்டும்: ப. சிதம்பரம்

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இந்த நிலையில் இதற்கான காரணம் என்ன என்று வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நிறைய செய்திகள் பரவி வருகிறது. அந்த செய்தியில், கொரோனா வைரஸின் ஆயுட்காலம் 12 மணி நேரம்தான். அது பொருட்களின் மீதும், தளங்களின் மீதும் 12 மணி நேரம்தான் இருக்க முடியும். மக்கள் ஊரடங்கு உத்தரவு 14 மணி நேரம் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும்.

    மக்கள் உள்ளே இருப்பார்கள்

    மக்கள் உள்ளே இருப்பார்கள்

    14 மணி நேரம் மக்கள் உள்ளேயே இருப்பார்கள் என்பதால், பொது இடங்களில் இருக்கும் கொரோனா வைரஸ் 12 மணி நேரத்தில் இறந்து விடும். இதனால் கொரோனா வைரஸால் பரவ முடியாது. அதன் தொடர்பு இழக்கப்படும். 14 மணி நேரத்திற்கு பின் இந்தியா மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இந்த நேரத்தை அதிகரித்து எதிர்காலத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று வாட்ஸ் ஆப்பில் செய்தி உலவி வருகிறது.

    என்ன செய்தி

    என்ன செய்தி

    வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் இந்த செய்தியை தமிழக பாஜகவை சேர்ந்தவர்கள் உட்பட பலர் ஷேர் செய்து வருகிறார்கள். வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் இந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யானது. ஏனென்றால் கொரோனா வைரஸ் ஸ்டீல் கம்பிகளில் (பேருந்து, ரயில், மெட்ரோ கம்பிகள் ஸ்டெயில்களால் ஆனது) 3 நாட்கள் வரை வாழும். அதேபோல் பிளாஸ்டிக் பொருட்களில் 4 நாட்கள் வரை வாழும்.

    உண்மை என்ன

    உண்மை என்ன

    குளிரான இடங்களில், சேர்களில் 2 நாள்கள் வரை வாழும். வெப்பம் குறைந்த இடங்களில் இதன் வாழ்நாள் இதைவிட அதிகமாக இருக்கும். கண்டிப்பாக இந்த வைரஸ் 12 மணி நேரத்தில் சாகாது. இந்த வைரஸ் மிகவும் வலிமையானது. அத்தனை எளிதாக இது செத்துவிடாது. இது இளைஞர்களை தாக்காது என்று கருதப்பட்ட நிலையில் தற்போது இளைஞர்களையும் தாக்க தொடங்கி உள்ளது.

    மிக அதிக வலிமை

    மிக அதிக வலிமை

    அப்படி இருக்க 12 மணி நேரத்தில் இந்த வைரஸ் சாகும் என்பது முழுக்க முழுக்க பொய்யான செய்தி ஆகும். இதை பலரும் நம்பி பரப்பி வருகிறார்கள். அதிலும் பாஜகவை சேர்ந்த காயத்திரி ரகுராம் உள்ளிட்டோர் கூட இதை கண் மூடித்தனமாக ஷேர் செய்து வருகிறார்கள்.இதனால் மக்கள் இடையே தவறான செய்திகள் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Coronavirus: Will the virus die in 12 hours, Fake forward on Modi's Janata Curfew plan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X