டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவின் அதி தீவிர தாக்குதலில் சிக்கிய ராஜஸ்தான், ம.பி.. பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்தில் மிக அதிகமாக இருந்து வருகிறது. ராஜஸ்தானிலும் மத்திய பிரதேசத்திலும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது.

மகாராஷ்டிராவில் 3205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்குதான் 194 பேர் பலியாகியும் உள்ளனர். நாட்டில் கொரோனாவால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிராதான்.

Coronvirus: MP, Rajasthan crosses 1000 cases

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து டெல்லியும் தமிழ்நாடும் அதிக பாதிப்பை சந்தித்துள்ளன. டெல்லியில் 1640 பேரும் தமிழகத்தில் 1267 பேரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் கொரோனா பாதிப்பே இருக்காது என மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் கொரோனாவின் உக்கிரம் அதிகமாக உள்ளது. ராஜஸ்தானில் 1131 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 956 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா தடுப்பு.. இந்த வேகம் முக்கியம்.. இப்படியே போனால் தமிழகம் சீக்கிரம் மீளும்.. ஒரு குட் நியூஸ்! கொரோனா தடுப்பு.. இந்த வேகம் முக்கியம்.. இப்படியே போனால் தமிழகம் சீக்கிரம் மீளும்.. ஒரு குட் நியூஸ்!

மத்திய பிரதேசத்தில் கொரோனாவுக்கு 55 பேர் பலியாகி உள்ளனர். இங்கு மொத்தம் 1164 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இங்கு ஒரே நாளில் 361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மத்திய பிரதேசத்தின் இந்தூரில் மட்டும் 244 பேருக்கு கொரோனா உறுதியானது.

Recommended Video

    குணமடைந்த 14 பேர்... ஒரே நாளில் நடந்த நல்ல மாற்றங்கள்

    இதற்கு அடுத்ததாக குஜராத்தில் 930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் 73 பேர்தான் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்தில்தான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

    English summary
    Madhya Pradesh recorded huge surge in Coronavirus infections with 361 new cases on yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X