டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்ஸ்ஸப்பா.. சொன்னதையே திரும்ப திரும்ப சொன்ன ப. சிதம்பரம்.. செய்வதறியாது குழம்பிய சிபிஐ!

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்று சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் தாறுமாறாக பதில் சொல்லி அதிகாரிகளை குழப்பி இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சொன்னதையே சொன்ன ப. சிதம்பரம்.. குழம்பிய சிபிஐ- வீடியோ

    டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்று சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் தாறுமாறாக பதில் சொல்லி அதிகாரிகளை குழப்பி இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

    முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நேற்று இரவு சிபிஐ மூலம் கைது செய்யப்பட்டார். அதன்பின் நேற்று இரவு இரண்டு மணி நேரம் அவர் சிபிஐ மூலம் விசாரணை செய்யப்பட்டார்.

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அவருக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டது. இன்று காலையும் இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரித்தனர்.

    மகன் எப்படி

    மகன் எப்படி

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த வருடமே ப. சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார். அப்போது கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற புகார் எழுந்தது. அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் சாப்பாடு சரியில்லை, ஆன்லைனில் ஆர்டர் செய்து கொடுங்கள் என்றெல்லாம் கூறி கார்த்தி கிண்டல் செய்தார்.

    அப்பாவும் அப்படியே

    அப்பாவும் அப்படியே

    தற்போது ப. சிதம்பரமும் அதேபோல் அதிகாரிகளை திணறடித்துள்ளார். ப. சிதம்பரம் இன்று சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் தாறுமாறாக பதில் சொல்லி அதிகாரிகளை குழப்பி இருக்கிறார் என்று கூறுகிறார்கள். முக்கியமாக சில கேள்விகளுக்கு அவர் மீண்டும் மீண்டும் ஒரே பதிலை சொல்லி உள்ளார்.

    மோசமான பதில்கள்

    மோசமான பதில்கள்

    அதேபோல் வேறு சில கேள்விகளுக்கு அதிகாரிகளுக்கு புரியாத சில பிரிவுகளையும், பொருளாதார கொள்கைகளையும் சொல்லி உள்ளார். மேலும் இந்திராணி முகர்ஜி தனக்கு யார் என்றே தெரியாது என்றும் ப. சிதம்பரம் கூறியுள்ளார். இதனால் சிபிஐ அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் கடும் குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    சிபிஐ அதிர்ச்சி

    சிபிஐ அதிர்ச்சி

    சிதம்பரத்திடம் இருந்து ஒரு பதிலை கூட சரியாக வாங்க முடியவில்லையே என்ற விரக்தியில் சிபிஐ அதிகாரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை இதை காரணமாக காட்டியே அவரை சிபிஐ காவலில் எடுக்க திட்டமிடும். விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி சிபிஐ அவரை காவலில் எடுக்க வாய்ப்புள்ளது.

    English summary
    Couldn't pull anything from P Chidambaram mouth: CBI officials worried.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X