டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புனித ஆறுகளில் சடலங்கள் மிதக்கின்றன...பிரதமரின் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை - ராகுல்காந்தி

நாட்டின் புனித ஆறுகளில் மனித உடல்கள் பயணிக்கின்றன. மருத்துவமனைகளில் மைல்கணக்கில் நோயாளிகள் காத்திருக்கின்றனர். இவை எதுவுமே பிரதமரின் கண்களுக்கு தெரியவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் ச

Google Oneindia Tamil News

டெல்லி: பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டு மரணமடைபவர்களின் உடல்கள் கங்கை, யமுனை ஆறுகளில் மிதக்க விடப்படுகின்றன. நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதப்பதால் ஆறுகள் மாசடைந்து வருகின்றன. நாய்கள் அவற்றை இழுத்து கடித்து குதறி வருகின்றன. இந்த சம்பவம் குறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புனித ஆறுகளில் சடலங்கள் பயணிப்பது பிரதமரின் கண்களுக்கு தெரியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Recommended Video

    Bihar-ல் கங்கை நதிக்கரையில் ஒதுங்கிய ஏராளமான சடலங்கள்.. Corona உயிரிழப்புகளா என விசாரணை

    இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரியும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.

    2 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு.. பெரும் சோகத்துடன் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைவிட்டு வெளியேறிய ஓபிஎஸ் 2 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு.. பெரும் சோகத்துடன் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைவிட்டு வெளியேறிய ஓபிஎஸ்

    ஹமீர்பூரில் உள்ள யமுனை ஆற்றில், இறந்த உடல்கள் பல மிதப்பதால் அப்பகுதியில் வாழும் உள்ளூர்வாசிகள் பீதியடைந்துள்ளனர்.
    சடலங்கள் கொடிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கிராமவாசிகளின் உடல்கள் என்றும், இறந்த உடல்களை தகனம் செய்வதற்கு இடங்கள் இல்லாத சூழலில் இவ்வாறு சடலங்கள் தூக்கி எரியப்பட்டுள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

    யமுனை ஆற்றில் சடலடங்கள்

    யமுனை ஆற்றில் சடலடங்கள்

    இதுகுறித்து, ஹமீர்பூர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் அனூப் குமார் சிங், யமுனா நதி ஹமீர்பூருக்கும், கான்பூருக்கும் இடையிலான எல்லையாக பாய்கிறது. உள்ளூர்வாசிகள் இந்த நதியை புனிதமான ஒன்றாக கருதுகின்றனர். மேலும் இறந்த கிராமவாசிகளின் உடல்கள் ஆற்றில் மிதக்க விடுவது ஒரு பழமையான சடங்கு என தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஹமீர்பூர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் அனூப் குமார் சிங், யமுனா நதி ஹமீர்பூருக்கும், கான்பூருக்கும் இடையிலான எல்லையாக பாய்கிறது. உள்ளூர்வாசிகள் இந்த நதியை புனிதமான ஒன்றாக கருதுகின்றனர். மேலும் இறந்த கிராமவாசிகளின் உடல்கள் ஆற்றில் மிதக்க விடுவது ஒரு பழமையான சடங்கு என தெரிவித்துள்ளார்.

    மிதக்கும் சடலங்கள்

    மிதக்கும் சடலங்கள்


    பீகார் மாநிலம் கதிஹாரில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் ஆறுகளில் கொட்டப்பட்ட ஒரு அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், மருத்துவமனை ஊழியர்கள் உடல்களை ஆற்றில் கொட்டுவது குறித்து விசாரிக்க விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    ஆறுகளில் வீசும் மக்கள்

    ஆறுகளில் வீசும் மக்கள்

    பிகார் மாநிலம், பக்சர் மாவட்டத்தில் உள்ளது செளசா கிராமத்தில் கங்கை ஆற்றின் கரையோரத்தில் சுமார் ஒரு கி.மீட்டர் தூரத்திற்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இறந்தவர்கள் உடல்களை அவர்களது உறவினர்கள் கங்கை ஆற்றில் வீசி செல்கின்றனர். தகனம் செய்ய பல ஆயிரம் வரை செலவாகிறது. பணமில்லாதது ஒருபக்கம், தகனம் செய்ய இடம் கிடைக்காமல் பலர் காத்திருக்க முடியாமல் ஆறுகளில் வீசி செல்கின்றனர்.

    தகனம் செய்ய இடமில்லை

    தகனம் செய்ய இடமில்லை

    பல உடல்கள் உத்தரபிரதேசத்திலிருந்து மிதந்து வந்திருக்க வாய்ப்புள்ளதாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர். கொரொனா காரணமாகச் சடலங்களை எரிக்க இடம் கிடைப்பதில்லை. அதனால்தான் மக்கள் இறந்த உடல்களை கங்கையில் மிதக்க விடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

    மோடியை தாக்கிய ராகுல்

    மோடியை தாக்கிய ராகுல்

    இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, ஆறுகளில் பாயும் எண்ணற்ற இறந்த உடல்கள் பல மைல்கள் வரை மருத்துவமனைகளில் நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமரே அந்த இளஞ்சிவப்பு கண்ணாடிகளை கழற்றுங்கள், உங்களுக்கு சென்ட்ரல் விஸ்டாவைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    English summary
    Countless dead bodies flowing in rivers Rahul Gandhi on Twitter. Lines in hospitals up to miles.The right to life security is taken away. PM, take off those pink goggles, so that nothing is visible except for Central Vista.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X