டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு நாளில் கொரோனாவால் அதிக பாதிப்பு.. அதிக மரணத்தை சந்தித்த நாடுகள்.. முதலிடத்தில் இந்தியா

Google Oneindia Tamil News

டெல்லி: ஒரு நாள் பாதிப்பில் உலகிலேயே கொரோனாவால் அதிக மரணம் மற்றும் அதிக பாதிப்பை சந்தித்த நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 58,16,103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கு இதுவரை 92,317 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,144 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவில் கொரோனா பரவ தொடங்கி இத்துடன் 10 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் உலகில் கொரோனா தொற்றால் 3,23,94,830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 987,066 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். 2,39,04,687 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். உலகில் தற்போது கொரோனா பாதிப்புடன் 75,03,077 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா டெஸ்ட்.. ஒரே நாளில் 90,607 சோதனை.. 5692 பேருக்கு தொற்று தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா டெஸ்ட்.. ஒரே நாளில் 90,607 சோதனை.. 5692 பேருக்கு தொற்று

அதிக மரணங்கள்

அதிக மரணங்கள்

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 71,84,854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 44,738 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 920 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலன் இன்றி பலியாகினர். இதனால் அங்கு கொரோனா பாதிப்பால் இதுவரை 207,516 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலி அதிகம்

பலி அதிகம்

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 85,919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,16,103 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,144 பேர் பலியாகினர். இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 92,317 ஆக உயர்ந்துள்ளது.

எத்தனை பலி

எத்தனை பலி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 32,129 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,59,909 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் நேற்று ஒரு நாளில் மட்டும் 818 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு கொரோனா தொற்றால் இதுவரை 139,883 பேர் பலியாகி உள்ளனர்

ரஷ்யா எப்படி

ரஷ்யா எப்படி

ரஷ்யாவில் கொரோனா தொற்றால் 1,128,836 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 6,595 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை கொரோனா பாதிப்பால் 19,948 பேர் பலியாகி உள்ளனர். உலகில் கொரோனா பாதிப்பு இந்தியா, அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், அர்ஜெண்டினா, ஸ்பெயின், இஸ்ரேல், இங்கிலாந்து, ரஷ்யா, கொலம்பியா போன்ற நாடுகளில் வேகமாக அதிகரித்து வருகிறது.

10 நாடுகள் எவை

10 நாடுகள் எவை

இந்தியா, அமெரிக்கா, பிரேசில், மெக்ஸிகோ, அர்ஜெண்டினா, கொலம்பியா, ஈரான், ரஷ்யா, இந்தோனேஷியா போன்ற 10 நாடுகளில் கொரோனாவால் நேற்று அதிக மரணங்கள் நிகழ்ந்தன. இந்தியா இதில் முதல் இடத்திலும் , இந்தோனேஷியா 10 வது இடத்தையும் பிடித்துள்ளது.

English summary
Countries most affected by corona in a day, and Countries with the highest death toll from corona by in day India in the first place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X