டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஸ்வரூபம் எடுக்கிறது கொரோனா.. மொத்த உலகமும் பெரும் நெருக்கடியில்.. ஹூ எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவைரஸின் பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல உலக நாடுகள் தவறான பாதையில் பயணித்துக் கொண்டுள்ளன.

ஒட்டுமொத்த உலகமும் தற்போது பெரும் நெருக்கடியில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநரான டெட்ராஸ் அதனம் கெப்ரியேசஸ் கூறியுள்ளார்.

கொரோனாவைரஸ் பரவல் இன்னும் முடியவில்லை. பல நாடுகளில் இரண்டாவது அலை கொடூரமாக வீசிக் கொண்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் திணறிக் கொண்டுள்ளன.

போச்சு.. போச்சு.. "நடுவுல வந்தேன்.. நீயே வச்சுக்க".. பரபரப்பாக பேசிய வனிதா.. அங்கே போக போறாராம்..!

டெட்ராஸ் விடுக்கும் எச்சரிக்கை

டெட்ராஸ் விடுக்கும் எச்சரிக்கை

இந்த நிலையில்தான் டெட்ராஸின் எச்சரிக்கை வந்துள்ளது. இதுகுறித்து டெட்ராஸ் கூறுகையில், பல நாடுகளில் தற்போது தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது. எதிர்பார்த்ததை விட அதி வேகமாக இது இருக்கிறது. பல நாடுகளில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இடமில்லாமல் தவிக்கின்றன. இன்னும் நாம் அக்டோபரைக் கூட முடிக்கவில்லை. அதற்குள்ளாகவே இப்படி ஒரு இக்கட்டான நிலை.

பல நாடுகளில் அலட்சியம்

பல நாடுகளில் அலட்சியம்

கொரோனாவைரஸ் பரவலை பல நாடுகள் அலட்சியமாக எடுத்துக் கொண்டுள்ளன. பல நாடுகளில் நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அபாயகரமான பாதையில் அவை போய்க் கொண்டுள்ளன. இப்படியே போனால் அங்கு சுகாதார கட்டமைப்புகள் மிகப் பெரிய அளவில் சீர்குலையும். இதன் காரணமாக மொத்த உலகமும் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

உலகின் வடக்கில் அதிக பரவல்

உலகின் வடக்கில் அதிக பரவல்

உலகின் வட பகுதியில்தான் அதிக அளவிலான பரவல் உள்ளது. இங்கு கட்டுக்கடங்காமல் நோய் பரவி வருகிறது. அடுத்த சில மாதங்கள் மிகக் கடினமானவை. சில நாடுகளில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும். உலக நாடுகளின் தலைவர்களுக்கு நான் விடுக்க விரும்பும் கோரிக்கை, தேவையில்லாமல் மரணங்களைத் தவிர்க்கவும், சுகாதார கட்டமைப்பு சீர்குலையாமல் இருக்கவும், தேவையான தற்காப்பு நடவடிக்கைகளை எடுங்கள்.

பள்ளிகளைத் திறக்காதீர்கள்

பள்ளிகளைத் திறக்காதீர்கள்

பள்ளி, கல்லூரிகளைத் திறக்காதீர்கள். மூடி விடுங்கள். நான் கடந்த மாதம் பிப்ரவரியில் சொன்னது போல இது இன்னும் தீவிரமடையும். அதை சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும். விளையாட்டாக இருந்து விட்டால் விபரீதமாகி விடும். பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுதான் புத்திசாலித்தனம். சோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

இதெல்லாம் அவசியம்

இதெல்லாம் அவசியம்

முதன்மை கான்டாக்டுகளைத் தேடிப் பிடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்த வேண்டும். மாஸ்க் அணிவதையும், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதையும் முறையாக பின்பற்ற வேண்டும். தேவையற்ற கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும். மேலும் லாக்டவுன்களை நாம் முறையாக பின்பற்ற வேண்டும் என்றார் டெட்ராஸ்.

English summary
WHO director Tedros Adhanom Ghebreyesus has warned that some countries going on a dangerous track.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X