டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமலாக்கத்துறை ஆட்டத்தால் ஆடிப் போன ப.சிதம்பரம்.. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    ப.சிதம்பரத்தை 19ம் தேதிவரை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

    டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சரணடைவது தொடர்பாக ப.சிதம்பரத்தின் மனு மீது நாளை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து டெல்லி சிறையில் அடைத்துள்ளனர். முன்னதாக சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை முயற்சித்தது.

    Court reserves order on Chidambarams surrender application

    இந்நிலையில் அமலாக்கத்துறையில் சரணடைவது தொடர்பாக சிதம்பரம் தரப்பில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.

    இந்த விசாரணையின் போது, ப. சிதம்பரம் தற்போது நீதிமன்ற காவலில் இருப்பதால் அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டிய தேவை இல்லை என்று அமலாக்கத்துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதற்கு எதிராக ப.சிதம்பரம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை தற்போது அமைதி காக்கிறது.

    மெரினாவை அதிர வைத்த நாதஸ்வர முழக்கம்.. ஜெ.சமாதியில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல திருமணம்!மெரினாவை அதிர வைத்த நாதஸ்வர முழக்கம்.. ஜெ.சமாதியில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல திருமணம்!

    இதே அமலாக்கத்துறைதான் சிதம்பரத்தை கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்றது. தற்போது சிதம்பரம் சரணடைய தயாராகவும் இருக்கிறார். ஆனால் காவலில் எடுக்க தேவை இல்லை என்கிறது அமலாக்கத்துறை.

    ப. சிதம்பரத்தை அவமதித்து, புண்படுத்தவே நீதிமன்றக் காவலிலேயே வைத்திருக்க விரும்புகிறது அமலாக்கத்துறை என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இதன் மீதான தீர்ப்பை நாளை வழங்குவதாக கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

    English summary
    Court reserves order on Former Union Minister P Chidambaram's surrender application after conclusion of arguments of both sides. Order to be passed tomorrow
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X