டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திடீரென உயர்ந்த பாதிப்பு.. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,936 பேருக்கு கொரோனா.. 199 பேர் பலி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,936 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று முதல்நாள் 13 ஆயிரத்திற்கு கீழ் கொரோனா கேஸ்கள் பதிவான நிலையில் மீண்டும் தினசரி கேஸ்கள் உயர்ந்து உள்ளது. இந்தியாவில் நேற்று முதல்நாள் 12,338 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் 14, 936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பண்டிகை நாட்களில் மக்கள் அதிகமாக வெளியே சென்றது, பலர் சுற்றுலாதலங்களுக்கு சென்றது இப்படி கொரோனா கேஸ்கள் உயர காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்தியாவில் மூன்றாம் அலை பாதிப்பு அக்டோபர் இறுதியில் ஏற்படும் என்று ஐசிஎம்ஆர் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் திடீரென கேஸ்கள் உயர்வது மோசமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது

அமெரிக்காவில் விஸ்வரூபம்- ஒரே நாளில் 71,809 பேருக்கு கொரோனா பாதிப்பு- 1,563 பேர் மரணம் அமெரிக்காவில் விஸ்வரூபம்- ஒரே நாளில் 71,809 பேருக்கு கொரோனா பாதிப்பு- 1,563 பேர் மரணம்

இந்தியா

இந்தியா

இந்தியாவில் இதுவரை 34,108,323 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 452,684 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 199 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 33,470,621 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 185,018 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

 ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடையும் நபர்களின் ரெக்கவரி ரேட் 98.15 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதன்படி தினமும் பதிவாகும் புதிய கேஸ்களை விட அதிக அளவில் மக்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 19,451 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் தற்போது இருக்கும் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கையான 185,018 கிட்டத்தட்ட 230 நாட்களில் பதிவான மிக குறைவான ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை ஆகும்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை 1300க்கும் கீழாக கேஸ்கள் பதிவாகி வந்த நிலையில் நேற்று உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 65,94,820 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 1638 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 26,805 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 1,39,865 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 64,24,547 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 49 பேர் பலியாகி உள்ளனர்.'

தமிழ்நாடு

தமிழ்நாடு

ஆனால் தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 26,89,463 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தமிழ்நாட்டில் புதிதாக 1179 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 35,928 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 26,39,209 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 14,326 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 16 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவில் கொரோனா காரணமாக 29,84,022 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடகாவிலும் நேற்று முன் தினத்தை விட நேற்று 100 கேஸ்கள் அதிகம் பதிவாகி உள்ளது. அங்கு புதிதாக 349 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இதுவரை 37,967 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 29,36,926 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 9,100 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 14 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா

கேரளா

கேரளாவில் கொரோனா கேஸ்கள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகிறது. ஒரு நாள் 6000+, இன்னொரு நாள் 7000+ என்ற அளவில் பதிவாகி வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 7643 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கேரளாவில் கொரோனா காரணமாக 48,68,640 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 80,328 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 27002 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 47,60,781 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 77 பேர் பலியாகி உள்ளனர்.

English summary
Covid 19: 14,936 tested positive for Coronavirus in India on Tuesday, 199 people died.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X