டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. கேரளாவில் கணக்கில் சேர்க்கப்பட்ட பழைய மரணங்கள்.. ஒரே நாளில் 464 மரணங்கள் பதிவு

Google Oneindia Tamil News

டெல்லி: இதுவரை 454,301 பேர் கொரோனா இந்தியாவில் காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 559 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் தொடர்ந்து 17 ஆயிரத்திற்கும் குறைவாக கேஸ்கள் பதிவாகி வருகிறது. மூன்றாம் அலை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இந்தியாவில் இதுவரை 34,174,843 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,071 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா, துருக்கியில் கொரோனா பரவல் தீவிரம்.. உலகம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 5,885 பேர் பலி!ரஷ்யா, துருக்கியில் கொரோனா பரவல் தீவிரம்.. உலகம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 5,885 பேர் பலி!

இந்தியாவில் இதுவரை 33,540,950 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 179,592 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவில் கொரோனா காரணமாக 29,85,598 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 371 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இதுவரை 38,002 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 29,38,653 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 8,914 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேர்தத்தில் கர்நாடகாவில் 29 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தினசரி கேஸ்கள் குறைந்து வருகிறது. இதுவரை எங்கும் திடீரென பாதிப்புகள் அதிகரிக்கவில்லை.. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 26,94,089 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக 1140 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 36,004 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். மொத்தமாக 26,44,805 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 13,280 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேர்தத்தில் தமிழ்நாட்டில் 17 பேர் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 66,01,551 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 1701 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 24,022 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 1,39,998 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 64,33,919 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 33 பேர் பலியாகி உள்ளனர்.'

கேரளா

கேரளா

நேற்று கேரளாவில் மட்டும் புதிதாக 464 பேர் பலியாகி உள்ளனர். இதனால்தான் இந்தியாவில் ஒரே நாளில் 559 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பழைய கொரோனா மரணங்களை கணக்கிட்டு கேரளா தற்போது தனது பட்டியலில் சேர்த்துள்ளதால் இப்படி திடீரென கொரோனா மரணங்கள் அங்கு அதிகரித்துள்ளது. கேரளாவை கடந்த வாரம் திடீரென அதிகரித்த கேஸ்கள் மீண்டும் குறைய தொடங்கி உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 8,909 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கேரளாவில் கொரோனா காரணமாக 47,97,409 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 80626 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 28,229 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 47,69,373 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர்.

English summary
Covid 19: 16,071 tested positive for Coronavirus in India on Saturday, 559 people died.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X