டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் 2,59,170 பேருக்கு கொரோனா பாதிப்பு : ஒரே நாளில் 1,761 பேர் மரணம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,761 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,21,089 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,761 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,80,530 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவிற்கு கொத்து கொத்தாக மரணமடைந்து வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கடந்த வாரத்தில் இருந்தே 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 2,59,170 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் முதலிடம்

கொரோனா பாதிப்பில் முதலிடம்

உலக அளவில் ஒருநாள் கொரோனா தொற்று பரவலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,21,089 உயர்ந்துள்ளது.

1.31 கோடி பேர் மீண்டனர்

1.31 கோடி பேர் மீண்டனர்

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 1,54,761 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,31,08,582 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 20,31,977 சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

1,80,530 பேர் மரணம்

1,80,530 பேர் மரணம்

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 1,761 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,80,530 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் நேற்று வரை 12,71,29,113 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முழு ஊராடங்கு

முழு ஊராடங்கு

நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாகவே 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். வட இந்தியாவில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைகளில் இடமின்றியும், மருந்து தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, டெல்லியில் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம், பஞ்சாப், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The second wave of corona virus is spreading fast across the country. Clusters are dying for the corona. In a single day, 1,757 people died in the corona. The total death toll for the corona has risen to 1,80,550.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X