டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா 2ஆம் அலை... எந்தெந்த மாநிலங்களில் ஆபத்து அதிகம்.. தமிழகத்தின் நிலை என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: ஒரு லட்சத்திற்கும் அதிக கொரோனா நோயாளிகளைக் கொண்ட 12 மாநிலங்களில் மூன்று மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும்போதும், கர்நாடகா, தமிழகம் போன்ற மாநிலங்களில் ஆக்டிவ் கேஸ்கள் அதிகரித்து வருகிறது.

Recommended Video

    India-வில் கொரோனாவின் 3rd Wave தவிர்க்க முடியாதது - அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை

    இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு மாதமாகவே தினசரி கொரோனா பாதிப்பும், ஆக்டிவ் கேஸ்களு்ம தொடர்ந்து அதிகரித்து வருகிறது

     கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்தும் ஆன்ட்டிபாடிகள்.. இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்தும் ஆன்ட்டிபாடிகள்.. இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி

    குறிப்பாக ஏப்ரல் 4ஆம் தேதி நாட்டில் 7.37 லட்சமாக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை ஒரே மாத்தில் 34.85 லட்சமாக அதிகரித்தது. கொரோனா நோயாளிகள் தொடர்ந்து அதிகரித்து வருவது, நாட்டிலுள்ள சுகாதாரத் துறை கட்டமைப்பில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

     ஆக்டிவ் கேஸ்கள்

    ஆக்டிவ் கேஸ்கள்

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இந்தியாவில் 472% அதிகரித்துள்ளது. நாட்டிலுள்ள 12 மாநிலங்களில் தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கடந்த சில தினங்களாக ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. அதேபோல குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் ஆக்டிவ் கேஸ்கல் குறைந்து வருகிறது.

    மகாராஷ்டிரா

    மகாராஷ்டிரா

    கொரோனா பரவலின் முதல் அலை இரண்டாம் அலை என இரண்டிலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது மகாராஷ்டிரா. இங்கு தற்போது 6.41 லட்சம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்திற்கும் மேல் குறைந்துள்ளது. மும்பை, புனே என ஹாட்ஸ்பாட் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு பெருவாரியாகக் குறைந்துள்ளது. அதேநேரம் லாதூர், பீட் மற்றும் சாங்லி போன்ற மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழகத்தில் கொரோனா பாசிடிவ் விகிதம் 15 சதவிகிதமாக உள்ளது. இருப்பினும் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 25 வரை, ஆக்டிவ் கேஸ்கள் தினமும் 3,000 என்ற விகதத்தில் உயர்ந்து வந்தது. தற்போது தமிழகத்தில், 1.25 லட்சம் ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது. அதேபோல ஏப்ரல் தொடக்கத்தில் 15 முதல் 20 வரை இருந்த தினசரி உயிரிழப்பு கடந்த சில தினங்களாக 120-150 வரை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

     கர்நாடகா

    கர்நாடகா

    தற்போது கர்நாடகா அடுத்த மகாராஷ்டிராவாக மாறு வருகிறது. அங்கு கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த ஒரு மாதத்தில் பாசிடிவ் விகிதம் நான்கு சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொரோனா பரிசோதனைகள் உயர்த்தப்படாத போதும் பாசிடிவ் விகதம் அதிகரித்து வருகிறது. அதாவது, மாநிலத்தில் போதிய அளவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்பதால் உண்மையான வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கலாம்.

    கேரளா

    கேரளா

    3.56 லட்சம் ஆக்டிவ் கேஸ்களுடன் கேரளா தற்போது மூன்றாவது மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. கேரளாவில் தினசரி உயிரிழப்புகள் அதிகரிப்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது, ஏனெனில் இத்தனை காலமாகக் கேரளா மற்ற மாநிலங்களை விட குறைந்த உயிரிழப்புகளைக் கொண்டிருந்தது. கேரளாவில் ஏப்ரல் 4ஆம் தேதி 10 ஆக இருந்த கொரோனா உயிரிழப்பு, இது மே 4இல் 57 அதிகரித்துள்ளது. கொரோனா பாசிடிவ் விகிதமும் சுமார் ஆறு சதவீதத்திலிருந்து 26 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

     உத்தரப் பிரதேசம்

    உத்தரப் பிரதேசம்

    அதிகளவில் கிரம புறங்களைக் கொண்டிருப்பதால் உத்தரப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது பலருக்கும் கவலையை ஏற்படுத்தியது இருப்பினும், கடந்த வாரத்தில் உத்தரப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. ஏப்ரல் மாதம் தொடர்ந்து அதிகரித்த ஆக்டிவ் கேஸ்கள் கடந்த சில தினங்களாகக் குறைந்து வருகிறது உத்தரப் பிரதேசத்தில் கடந்த நாட்களில் மட்டும் ஆக்டிவ் கேஸ்கள் சுமார் 38,000 வரை குறைந்துள்ளது.

    English summary
    active cases reduce in major states.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X