டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுதான் ஒரே வழி.. மோடி மீட்டிங்கில் 8 மாநிலங்களுக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. 3 முக்கியமான டாஸ்க்!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பாதிப்பு, வேக்சின் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை செய்தார். இதில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநில முதல்வர்களுக்கு முக்கியமான 3 டாஸ்குகளை கொடுத்தார்.

உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வேக்சினுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலை, நோவாவேக்சின், சினோவேக்ஸ், ஃபைசர், மாடர்னா, பாரத் பயோ டெக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உலகம் முழுக்க ஆராய்ச்சிகளை செய்து வருகிறது

இதில் பைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்ட் பல்கலை வேக்சின்கள் அதிக நம்பிக்கை அளித்து வருகிறது. ஃபைசர், மாடர்னா நிறுவனங்கள் சோதனை முடிந்துள்ள நிலையில் விரைவில் இதற்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nivar: இது திருமண காலம்.. முதல்ல கொரோனா கெடுத்துச்சு.. இப்ப நிவர்.. அத்தை மகளை காண முடியலையே! Nivar: இது திருமண காலம்.. முதல்ல கொரோனா கெடுத்துச்சு.. இப்ப நிவர்.. அத்தை மகளை காண முடியலையே!

ஆலோசனை

ஆலோசனை

இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்தார். கொரோனா பரவல், இரண்டாம் அலை அச்சம், கொரோனா வேக்சின் தயாரிப்பு, விநியோகம் என்று பல விஷயங்கள் குறித்து இதில் ஆலோசனை செய்தார். 8 மாநில முதல்வர்கள் இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டனர்.டெல்லி, மஹாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

குறிக்கோள்

குறிக்கோள்


இதில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா 8 மாநில முதல்வர்களுக்கு முக்கியமான 3 டாஸ்குகளை கொடுத்தார். அதன்படி டாஸ்க் 1. மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் இருக்கும் ரெட் சோன், கன்டெயின்மென்ட் சோன் பகுதிகளை எல்லா வாரமும் சோதனை செய்ய வேண்டும். அங்கு இருக்கும் கேஸ் நிலவரம், புதிய கேஸ் நிலவரங்களை வைத்து அந்த பகுதிகளின் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும். அந்த பகுதி ரெட் சோனாக நீடிக்குமா என்று உறுதி செய்ய வேண்டும்.

முக்கிய வேண்டுகோள்

முக்கிய வேண்டுகோள்

டாஸ்க் 2. அதேபோல் கொரோனா இறப்பு சதவிகிதம் 1% ஆக குறைக்கப்பட வேண்டும். இதற்கான அனைத்து பணிகளையும் இந்த 8 மாநிலங்கள் செய்ய வேண்டும். டாஸ்க் 3. புதிய கொரோனா கேஸ்களில் சதவிகிதம் 5%க்கும் கீழ் குறைக்கப்பட வேண்டும் என்று அமித் ஷா இந்த 8 மாநிலங்களுக்கு டாஸ்க் கொடுத்துள்ளார். இரண்டாம் அலையை தடுக்கும் விதமாக அமித் ஷா இந்த திட்டங்களை வகுத்துள்ளார்.

ஆலோசனை செய்தார்

ஆலோசனை செய்தார்

கொரோனா வேக்சின் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி இரண்டு நாடுகளுக்கு முன் வல்லுனர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். நிதி ஆயோக், மருத்துவ குழு, வேக்சின் ஆராய்ச்சி குழு என்று பல்வேறு குழுவுடன் மோடி ஆலோசனை செய்தார். இதை தொடர்ந்து இன்று முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து உள்ளார். இந்தியாவில் வேக்சின் வந்த பின் யாருக்கும் முதலில் கொடுக்கலாம் என்பது குறித்த ஆலோசனைகளை பிரதமர் மோடி இதில் செய்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Covid 19: PM Modi to hold a meeting with State chief minister on vaccine strategy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X