டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவின் முதல் கொரோனா வேக்சின்.. கோவேக்சின் எவ்வளவு தடுப்பாற்றல் கொண்டது?பாரத் பயோடெக் குட்நியூஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் உருவாக்கப்பட்டு இருக்கும் முதல் கொரோனா வேக்சினான கோவேக்சின் மருந்து 60% தடுப்பாற்றலை கொண்டு இருக்கும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவிற்கு எதிராக தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. கோவேக்சின் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்த மருந்தின் மூன்றாம் கட்ட மனித சோதனைகள் தற்போது நடந்து வருகிறது.

இதுவரை இரண்டு கட்ட மனித சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

மிக குறைந்த விலை.. அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் சொன்ன குட்நியூஸ்.. கம்மி ரேட்டில் கொரோனா வேக்சின் மிக குறைந்த விலை.. அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் சொன்ன குட்நியூஸ்.. கம்மி ரேட்டில் கொரோனா வேக்சின்

மூன்றாம் கட்டம்

மூன்றாம் கட்டம்

இந்த மூன்றாம் கட்ட மனித சோதனையில் 26000 தன்னார்வலர்கள் பங்கு பெற்றுள்ளனர். மொத்தம் நாடு முழுக்க 25 நகரங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மிகப்பெரியது

மிகப்பெரியது

இந்தியாவில் செய்யப்படும் மிகப்பெரிய கொரோனா வேக்சின் சோதனை ஆகும் இது. இந்த நிலையில் கோவேக்சின் மருந்து 60% தடுப்பாற்றலை கொண்டு இருக்கும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள அந்த நிறுவனம், பொதுவாக ஒரு மருந்துக்கு 50%க்கும் அதிகமான நோய் தடுப்பாற்றல் இருந்தால் அதை உலக சுகாதார மையம் அனுமதிக்கும்.

அனுமதி

அனுமதி

வேக்சின் அனுமதியில் இந்த நடைமுறைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கோவேக்சின் மருந்துக்கும் விரைவில் அனுமதி கிடைக்கும். கோவேக்சின் மருந்து 60% தடுப்பாற்றலை கொண்டு இருக்கும். தற்போது நடக்கும் சோதனைகளின் படி கோவேக்சின் மருந்தின் தடுப்பாற்றல் இதை விட அதிகம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் காலாண்டு

இரண்டாம் காலாண்டு

தற்போது துரிதமாக சோதனைகள் நடந்து வருகிறது. அதேபோல் கவனமாக சோதனைகளை செய்து வருகிறோம். 2021ன் இரண்டாம் காலாண்டிற்குள் மொத்தமாக இந்த மருந்துக்கு அனுமதி வாங்க முடியும் என நம்புகிறோம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Covid 19: Bharat Biotech says its vaccine will have 60% of effectiveness on people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X