டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"1 வாரம் சிகிச்சை தரப்பட்டது".. கோவேக்சின் பின்விளைவுகளை மறைத்ததா பாரத் பயோடெக்?.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இருக்கும் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் கட்ட சோதனையில் இளைஞர் ஒருவருக்கு மோசமான பின்விளைவுகள் ஏற்பட்டதாக புகார்கள் வைக்கப்பட்டது உள்ளது.

உலகம் முழுக்க கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்க கடுமையான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. ஃபைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்கள் தயாரித்து இருக்கும் கொரோனா வேக்சின் மூன்று கட்ட சோதனை முடித்து அனுமதிக்காக காத்து இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இருக்கும் கோவேக்சின் மருந்தும் மூன்றாம் கட்ட மனித சோதனையில் உள்ளது. நாடு முழுக்க பல்வேறு நகரங்களில் இந்த மருந்தின் மீதான மனித சோதனை நடந்து வருகிறது.

அடுத்த ஆண்டுக்கு முன் எந்த தடுப்பூசியும் தயாராக இருக்காது.. நாடாளுமன்றக் குழு முன் அதிகாரிகள் பதில்அடுத்த ஆண்டுக்கு முன் எந்த தடுப்பூசியும் தயாராக இருக்காது.. நாடாளுமன்றக் குழு முன் அதிகாரிகள் பதில்

எப்படி?

எப்படி?

இந்த நிலையில் இந்த கோவேக்சின் மருந்தின் முதல் கட்ட மனித சோதனையின் போது இளைஞர் ஒருவருக்கு பின்விளைவுகள் வந்ததாக கூறப்படுகிறது. அதாவது மருந்தை எடுத்துக்கொண்ட தன்னார்வலர் ஒருவருக்கு மோசமான பின்விளைவுகள் ஏற்பட்டது என்றும், இதனால் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இப்படி பின்விளைவுகள் ஏற்பட்ட நபருக்கு 35 வயதாகிறது. இவருக்கு உடலில் நாள்பட்ட நோய்களும் இல்லை. நல்ல ஆரோக்கியமாக இருந்த இவருக்கு கோவேக்சின் எடுத்ததும் பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளது. நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கட்டுள்ளார். ஒரு வார சிகிச்சைக்கு பின் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா வேக்சின், மற்றும் ஜான்சனன் ஜான்சன் வேக்சின் மருந்துகளின் சோதனையின் போதும் 3ம் கட்டத்தில் இதேபோல் தன்னார்வலர்களுக்கு பின்வுளைவுகள் ஏற்பட்டது. இதனால் உடனே அந்த சோதனை நிறுத்தப்பட்டு, மறு ஆய்விற்கு பின்பே மீண்டும் சோதனை தொடங்கியது. ஆனால் கோவேக்சின் சோதனையை பாரத் பயோடெக் நிறுவனம் இது போல் நிறுத்தவில்லை.

சொல்லவில்லை

சொல்லவில்லை

அதேபோல் பாரத் பயோடெக் நிறுவனம் இந்த சம்பவத்தை மறைத்துவிட்டதாகவும் செய்திகள் வந்தது. அதாவது வேக்சின் சோதனையை நிறுத்தாமல், அதை தொடர்ந்து மேற்கொண்டதோடு, இந்த பின்விளைவு குறித்த தகவலையும் பாரத் பயோடெக் நிறுவனம் மறைத்துவிட்டது என்று செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்திகளை பாரத் பயோடெக் நிறுவனம் மறுத்துள்ளது.

கோவேக்சின்

கோவேக்சின்

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் மருந்து எடுத்துக்கொண்ட நபர் ஒருவருக்கு பின்விளைவுகள் வந்தது உண்மைதான். ஆனால் அவர் தொடர் சிகிச்சைக்கு பின் குணமாகிவிட்டார். அதே சமயம் இந்த பின்விளைவுகள் ஏற்பட்ட 24 மணி நேரத்தில் அதை மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு நாங்கள் தெரிவித்துவிட்டோம். பின்விளைவுகள் குறித்து கூறிவிட்டோம்.

முறைகேடு இல்லை

முறைகேடு இல்லை

இதில் எந்த விதமான முறைகேடும் நடக்கவில்லை. இதனால் தொடர்ந்து மருந்து சோதனையை மேற்கொண்டு வருகிறோம். கோவேக்சின் காரணமாக பெரிய அளவில் பின்விளைவுகள் இல்லை. மூன்றாம் கட்ட சோதனைக்கு பின் முழுமையான முடிவுகள் வெளியிடப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Covid 19: Bharat Biotech vaccine shot had an adverse event during 1st phase vaccine trial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X