டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி 24 மணிநேரமும் போட்டுக்கொள்ளலாம் - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன்

தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக நேரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று கருதி மத்திய சுகாதார அமைச்சகம் 24 மணிநேரமும் கொரோனா தடுப்பூசி போடலாம் என அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி : கொரோனா தடுப்பூசி போடுவதற்கு இனி நேரம் ஒரு தடையாக இருக்காது. பொதுமக்கள் தங்கள் வசதிப்படி வாரத்தின் எந்த ஒரு நாளிலும் 24 மணி நேரமும் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 12 கோடி பேரை பாதித்துள்ளது. 9 கோடி பேர் மீண்டுள்ளனர். இந்தியாவில் 1கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 67 லட்சத்து 42 ஆயிரத்து 187 சுகாதார பணியாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 27 லட்சத்து 13 ஆயிரத்து 144 சுகாதார பணியாளர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

Covid 19 can be vaccinated 24 hours a day - Union Minister Harsh Vardhan

இதே போன்று 55 லட்சத்து 70 ஆயிரத்து 230 முன்கள பணியாளர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 834 முன்கள பணியாளர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசியும், நாள்பட்ட நோயுடன் போராடும் 45 வயதுக்கு மேற்பட்ட 71 ஆயிரத்து 896 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் 5 லட்சத்து 22 ஆயிரத்து 458 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

குடியரசுத்தலைவர், பிரதமர், அமைச்சர்கள், நடிகர்கள், அரசியல் பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி போடுவதற்கு இனி நேரம் ஒரு தடையாக இருக்காது. பொதுமக்கள் தங்கள் வசதிப்படி வாரத்தின் எந்த ஒரு நாளிலும் 24 மணி நேரமும் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவித்துள்ளார்.

Covid 19 can be vaccinated 24 hours a day - Union Minister Harsh Vardhan

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பொதுமக்கள் தங்கள் வசதிப்படி எந்த நேரத்திலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். பிரதமர் நரேந்திர மோடி ஆரோக்கியத்தையும், நாட்டு மக்களின் நேரத்தையும் மதிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசியின் வேகத்தை அதிகரிப்பதற்காக நேர தடையை அரசு நீக்கி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக நேரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று கருதி மத்திய சுகாதார அமைச்சகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

English summary
The Union health ministry has given hospitals the permission to administer the Covid-19 vaccine to those who are eligible as per their convenience.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X