டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹார்வார்டு பாடப் புத்தகத்தில் ஜிஎஸ்டி, கோவிட் 19 தோல்விகள் இடம்பெறும்.. ராகுல் கிண்டல்

Google Oneindia Tamil News

டெல்லி: எதிர்காலத்தில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் பாடங்களாக ஜிஎஸ்டி மற்றும் கோவிட் 19 தோல்விகள் இருக்கும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை சாடியுள்ளார்.

துவக்கத்தில் இருந்து ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார். இதன் அடுத்த கட்டமாக தற்போது கொரோனா வைரஸ் தொடர்பான விஷயங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து வருகிறார்.

Covid 19, GST failure Will be Future courses Harvard university:posted by Congress leader Rahul Gandhi

இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில் மத்திய பாஜக அரசை கடுமையாக சாடி இருக்கிறார். அவரது ட்விட்டில், ''கோவிட் 19, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி தோல்விகள் ஆகியவை எதிர்காலத்தில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் பாடங்களாக இருக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது பதிவில், ''மகாபாரதப் போர் முடிய 18 நாட்கள் ஆனது. கொரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொள்ள 21 நாட்கள் பிடிக்கும்'' என்றும் விமர்சித்துள்ளார்.

உலகளவில் கொரோனா பாதிப்பு பட்டியலில் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளை அடுத்து இந்தியா மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது. இதையடுத்து ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

வாட்டியெடுத்த தனிமை.. தவித்த இளம் விதவை.. மாமனாரையே கல்யாணம் முடித்த மருமகள்.. வைரல் நியூஸ்வாட்டியெடுத்த தனிமை.. தவித்த இளம் விதவை.. மாமனாரையே கல்யாணம் முடித்த மருமகள்.. வைரல் நியூஸ்

இவருக்கு பதில் அடி கொடுத்திருக்கும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, ''பாதுகாப்பு துறையின் நிலைக்குழு கமிட்டியின் ஒரு கூட்டத்தில் கூட ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில், ஆளும் கட்சியை விமர்சனம் செய்யக் கூடாது. நாட்டின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில், ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து ராகுல் கேள்வி எழுப்புகிறார்.

ராகுல் காந்தி புகழ்பெற்ற பாரம்பரிய வம்சத்தை சேர்ந்தவர். அவருக்கு கமிட்டி பெரிய விஷயம் இல்லை. கமிஷன்தான் பெரிய விஷயம். காங்கிரசில் தகுதி படைத்த பல தலைவர்கள் உள்ளனர். ஆனால், இந்த வம்சம் அவர்களை ஆளுமை நடத்த அனுமதிக்காது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்று கருத்து தெரிவித்து இருந்த ராகுல் காந்தி, ''பிரதமர் நிதி குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. கொரோனா நோயாளிகளை பாதுகாக்க போதிய வென்டிலேட்டர்கள் இல்லை. தரமற்ற வென்டிலேட்டர்களால் இந்தியர்கள் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்து இருந்தார்.

English summary
Rahul Gandhi has criticised BJP government and posted that GST Will be Future Harvard Case Studies on Failure
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X